Skip to main content

18) பெண் மீன் விழியில்


தாரா சித்தார்த்தை பார்க்க வந்து இருந்தாள். 

தாரா இதன்யாவை பற்றி கேட்க, உடனே ஷி இஸ் நாட் ஜில்லு... ஷி யிஸ் லிட்டில் ஹார்ட் அண்ட் வெறி ஹாட்... என சித்தார்த் சொல்ல

தாரா, ஹே சித்து இது நிஜமாவே நீ தானா என்னை ஒரு கிள்ளு கில்லுடா...

சித்தார்த் அவளை முறைக்க ஹே சத்தியமா  சான்சே இல்ல ஐ கான்ட் பிலீவ் இட்...

இப்போ உனக்கு என்ன பிராப்ளம் என்று அந்த இயற்பியல் புத்தகத்தை புரட்டி கொண்டே சித்து கேட்க,

நீ ஒரு வார்த்தை கூட பேச காசு கொடுக்கணும் அப்டின்னு குரு சொல்லுவான்.  அதுவும் இல்லாமல் உனக்கு லீனாவ தவிர யாரையும்.... என தாரா சொல்ல அங்கு அவன் குடித்த லெமன் டீ கப் எடுத்து வீச அது துண்டு துண்டாக நொறுங்கி விழுந்தது.

தாரா,பிளீஸ் பிளீஸ் தெரியாம சொல்லிட்டேன் டா ..

சித்தார்த் அவன் கைகளை முறுக்கினான்.

இல்ல டா அந்த லிட்டில் ஹார்ட் யாரு என தாரா சொல்ல அந்த பெயரை கேட்டதும் அவன் உதடுகள் கொஞ்சம் வளைந்தது. உன் கிட்ட சொல்ல முடியாது இப்போ கிளம்பு...

ஹே சொல்லு சொல்லு பிளீஸ் டா என அவள் கெஞ்ச.. 

அவ கெமிஸ்ட்ரி ஸ்டூடண்ட் அவ படிச்சுட்டு இருக்கா... என இழுத்தான். 

ம்ம் பாருடா இன்டரெஸ்டிங்
நீ பிசிக்ஸ், அவ கெமிஸ்ட்ரி ரெண்டு பேரும் சேர்ந்தா பிசிகல் கெமிஸ்ட்ரி தான்

என்ட் ஆப் கிளம்பு...
என்று சித்தார்த் அவளை கதவுக்கு அருகில் போய் தள்ள

 தாரா, ஹே நாளைக்கு காலைல வருவேன்.

சித்தார்த்,உனக்கு ஷூட்டிங் இல்லையா...

இப்போ ஹீரோ சண்டைக்காட்சி போர்ஷன் அங்கே எனக்கு வேலை இல்ல...

சித்து,ம்ம் அப்போ நாளைக்கு பார்க்கலாம்.

இதன்யா என்ன செய்து கொண்டு இருக்கிறாள். ம்ம் வாங்க பார்க்கலாமே
இதன்யா பள்ளி முடிந்ததும் நேராக விடுதிக்கு சென்றவள்.

அய்யோ இவன் இவனை நான் என்ன பண்ணட்டும், என்று தன் உதடுகளை தொட்டு பார்த்தாள். ஒரு நிமிடம் ஷாக் அடித்தது. உதடுகளை வருடினாள்.

"எனக்கு அவன் அருகில் இருக்கும்போது ஏன் விலக்க தோன்ற வில்லை. அவன் வாசனை அது ஏன் என் மேல் வீசுவது போன்று தோன்றுகிறது. ஒரு வேளை அவன் நடிகன் அதனால் எனக்கு இப்படி தோணுதா"  என கண்ணாடி அருகில் சென்றாள். 

"பிரியா சொன்னாளே!  இந்த மாதிரி நினைப்பு இருக்க கூடாது. அவனும் எப்போ பார்த்தாலும் என்னை சீண்டி கொண்டே இருக்கிறான். இப்போ நான் என்ன பண்ணட்டும். இனி அவனை அவேய்ட் பண்ணனும் எப்படி பன்றது இன்னும் ஒரு வாரம் வர மாட்டான் அதுக்குள் எதவும் யோசிக்கணும். இந்த காலேஜ் சேர்ந்து ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள் எவ்ளோ பிரச்சனை."

சரி இந்த பிரியாவுக்கு கால் பண்ணலாம் என பிரியாவுக்கு கால் செய்தாள்.

பிரியா,ஹே என்ன டி எனக்கு கால் பண்ணி இருக்க... சும்மா தான் டி பேசணும் போல் இருந்தது.

பிரியா அவளிடம் ஹே எதோ சம்திங் நடந்து இருக்கு என்ன விஷயம் சொல்லு? 


எப்படி டி கண்டு பிடிச்ச...
என்னோட இதயா பற்றி எனக்கு தெரியாதா... ஹே அது சித்து விஷயம் தான

உ.. உன்.. உனக்கு எப்டி தெரியும்...
சரி சரி சொல்லு என்ன விஷயம்..
இதன்யா அவளிடம் முத்தம் கொடுத்தது பற்றி சொல்லாமல் அவள் இதழை வருடியது, அன்று தன் உயிர் காப்பாற்றியது பற்றி கூற...

பிரியா சாக் ஆகி ஹே என்ன டி சொல்ற? 

ம்ம் ஆமா பிரியா எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல டி.. வேலை விட்டு போறேன்னு கூட சொல்லிவிட்டேன் டி.. அதுக்கு அவன் உனக்கு என் மேல் எதுவும் சம்திங் ஆ அப்டின்னு சொன்னா!  நான் இல்லை அப்டின்னு சொன்னேன். அப்போ உன் வேலைய பாருன்னு சொல்லிட்டான்.

சரி உன்னோட உதடை சித்து வருடும் போது எப்படி இருந்தது? 


ஹே  மங்குனி அது இப்போ உனக்கு தேவையா நான் கேட்டதுக்கு பதில் சொல்லு டி...

பிரியா, ஓவரா பண்ணாத இதயா  சும்மா தெரிஞ்சுக்க தான் எனக்கு அப்படி ஒரு அனுபவம் நடந்தது இல்லை டி நீ பேசுறது பார்த்தால் சித்து டார்லிங் உனக்கு கிஸ் கொடுத்த மாதிரி பில்ட் அப் கொடுக்குற..

இதை கேட்டு இதன்யாவின் போன் கை நழுவியது.

ஹே இதயா! 

இதயா லைன்ல இருக்கியா டி...
போனை எடுத்து காதில் வைத்தவள் ம்ம் இருக்கேன் என்று படபடக்க பேசினாள்.

அதென்ன டார்லிங்? 

ஏன் டி உனக்கு என்ன?  எனக்கு சித்துவ ரொம்ப பிடிக்கும்.

சரி அதுக்கு நான் என்ன பண்ணட்டும்... நீ  ஒன்னும் பண்ண வேணாம் எதுவும் ஐடியா கொடு...

என்னன்னு...

இதன்யா,  இனி அவன் என் பக்கத்தில வர கூடாது.
ம்ம் சரி ஓகே அதை நாளைக்கு யோசிச்சு சொல்றேன்.

இன்னிக்கி என்னாச்சி...
அவசரபடாத டி அதுக்கு நிறைய அனலைஸ் பண்ணனும்.
ம்ம் ஓகே ...

ஹே இன்னிக்கி அந்த பிக்ஸ் பாத்தியா அது தான் ஹாட் டாபிக்..
எந்த பிக்? என இதன்யா வினவ.. 

அது தான் சித்துவும் அந்த லீனாவும் சேர்ந்து ஒரு போட்டோ...

இதன்யா கொஞ்சம் வருத்தம் கலந்த குரலில் ம்ம் பார்த்தேன் டி...

அப்புறம் எதுக்கு உன் கிட்ட இப்படி நடந்து கொள்கிறார் ஒரு வேளை சித்து அவங்க அப்பா ரவிச்சந்திரன் மாதிரி அப்டின்னு நினைக்கிறேன் டி...
ஏன் டி அப்படி சொல்ற...



பிரியா, ம்ம் சித்து அப்பாவுக்கு ரெண்டு மனைவி முதல் மனைவி அவங்க தான் சித்து அம்மா அப்புறம் ஒரு பொன்னு ரோஷினி,   அந்த ரெண்டாவது மனைவி பெயர் ரதி தேவி அவங்களுக்கு ஆரவ் அப்டின்னு ஒரு பையன் அதனால் சித்துவுக்கு அவங்க அப்பாவை சுத்தமா பிடிக்காது. அப்டின்னு பேசிக்கிராங்க அது உண்மையா அப்டின்னு தெரியல..  அதனால் தான் சித்தார்த் கிருஷ்ணா அப்படின்னு அம்மா வழி பேரு யூஸ் பன்றாரு...

இதன்யா, ம்ம் போதும் அவன் புராணம் எனக்கு அவன் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கரது அதுக்கு ஐடியா மட்டும் யோசி என சொல்லி போன் வைத்தாள்.

என்ன தான் ஆயிரம் மூளை அவளுக்கு கிளாஸ் எடுத்தாலும் மனம் அவன் அருகாமை , அவனது பார்வை , அவன் அலட்சிய பேச்சு இதற்கு ஏன்க செய்தது.
லூசு இதன்யா அவனுக்கு வேற ஒரு பொன்னு கூட கல்யாணம் ஏன் லிவிங் டூ கேதர் ல கூட இருப்பாங்க இனி அவனை பற்றி நினைக்காதே என தன் மனதுக்கு கடிவாளம் போட்டாள்.
அடுத்த இரண்டு நாட்கள் வேகமாக ஓடியது பிரியா போன் செய்து அவளுக்கு சில யோசனைகள் கூற இவளும் சரி என்றாள்.



இங்கே சித்தார்த்தின்  தந்தை வழி தாத்தா சந்திர மௌலி அவனை பார்க்க வீட்டுக்கு வர சொன்னார். அவர் தான் சித்தார்த்துக்கு சொந்தமான அனைத்து சொத்து உரிமையையும் அவனுக்கு கொடுத்து இப்போது அவன் கவனிப்பின் பேரில் தான் பாதி இயங்குகிறது. அதை எப்படியும் கை பற்றி அவனை அவமான படுத்தி அந்த சிஇஓ பதவியில் தன் மகன் ஆரவை அமர்த்த தான் ரதி தேவி இவ்வளவு சூழ்ச்சி எல்லாம் செய்கிறாள்.

கிருஷ்ணன் வீட்டை போல் பிரம்மாண்டமான வீடு தான் அவன் அங்கு சென்றதும் வழக்கம் போல் இன்னும் கடுமையாக முகத்தை வைத்து கொண்டான். உள்ளே செல்ல அவன் பாட்டி ஸ்வர்ணம்  அவனை உள்ளே அழைத்தாள். 

சோபாவில் அமர்ந்தவன் அங்கு இருக்கும் பணியாள் கிட்ட " ஐம் சித்தார்த் கிருஷ்ணா மிஸ்டர் சந்திர மௌலி ய பார்க்க வந்து இருக்கிறான் என்று போய் சொல்!" ... என்று கடுமையான கம்பீரம் நிறைந்த குரலில் சொல்ல

ச சரிங்க சார்... என்று அந்த பணியாள் திரும்பும் நேரம் சந்திர மௌலி கீழ வந்தார் சித்தார்த் பேசியது காதில் விழ அவருக்கு வருத்தம் இருந்தாலும் ஒரு பக்கம் பெருமை தான் எவ்வளவு ஆளுமையான பேச்சு என் பேரன் என் ரத்தம் என சந்தோஷம்.... அருகில் அவர் வர மரியாதை நிமித்தம் காரணமாக எழுந்து நின்றான்.

எப்படி இருக்க சித்து? 

என் கிட்ட வேலை விஷயம் மட்டும் பேசுங்க இல்லை நான் இப்போவே கிளம்பிடுவேன்...
நான் என்ன பா செய்தேன்... என் மேல் உனக்கு ஏன் இவ்வளவு வெருப்பு...
இப்போது ஒரு புன்னகையை சிந்தி எனக்கு என் மேலேயே வெறுப்பு ஏன்னா இந்த இரத்தம் என் உடலில் ஓடுவது உங்க பையனோடது ஐ ஹேட் சீட்டர்ஸ்...

அம்மா சொல்லி இருக்காங்க உங்களை சங்கட படுத்த கூடாது அப்டின்னு உங்களுக்கு இப்போ என்ன வேணும் ..
எனக்கு என்னோட பேரன் வேனும் ..
வாட் அ காமெடி சென்ஸ்
அதுக்கு தான் மிஸ்டர் ஆரவ் ரவிசந்திரன் இருக்காரு அப்புறம் என்ன...
இதெல்லாம் உங்களை கஷ்ட படுத்த நான் பேச வில்லை நான் எப்போதும் சித்தார்த் கிருஷ்ணா தான் என்று சொல்ல இதற்கும் மேல் பேசி ஒன்றும் பயனில்லை என்று அவர் தொழில் தொடர்பாக பேசி விட்டு அப்படியே தன் பேரனுடன் மதிய உணவை முடித்தார்.
அதற்கும் மேல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என சித்தார்த் கிளம்பி விட்டான் அவன் வெளியே செல்லும் நேரம் காருக்கு அருகில் ரதி தந்திர புன்னகையுடன் நின்று கொண்டு இருந்தாள்.
என்ன மிஸ்டர் எப்படி இருக்க ...
சித்து எந்த பதிலும் சொல்ல வில்லை...
ம்ம் சரி வந்ததும் வந்து விட்டாய் இதோ இந்த கவர் பிரித்து பார்...

சித்தார்த் என்ன என்பது போல பார்க்க ரதி கேவல புன்னகையை சிந்தி அதை அவனிடம் கொடுத்து விட்டு ஒரு பார்வை

என்னை கேவலமாக பார்க்கிற உனக்கு உன்னோட கேர்ல் பிரென்ட் அவளோட பெட்டை யாரு கூட ஷார் பண்ணி இருக்கா அப்டின்னு கொஞ்சம் பார்த்துக்கோ டா என மனதில் நினைத்துக் கொண்டு...
நான் வரேன் என ரதி அவனை கேவலமாக பார்த்து விட்டு உள்ளே சென்றாள்.

சித்தார்த் காரில் ஏரியவன் அதை திறந்து பார்க்க அதில் மெலினா மற்றும் JK இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இதை பார்த்து அவனுக்கு ஒரே ஒரு  கசந்த புன்னகை மட்டுமே வந்தது.

இங்கே இதன்யாவின் வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி ஹாய் தனு...
இதை பார்ததும் கண்டு கொண்டாள். ம்ம் சொல்லுங்க சீனியர்...
இப்போது ரிஷி ஒரு போட்டோ அனுப்பினான்.
அதை பார்த்த இதன்யா அப்போ அதை நீங்க தான் வைத்து இருக்கீங்களா...
ம்ம் ஆமா என்று சில சிரிக்கும் ஸ்மைல் ஸ்டிக்கர் அனுப்பி விட்டான்.
எல்லாம் உங்களால் தான் அன்னிக்கு ஒரு நாள் ஃபுல் லா நான் லேப் க்கு வெளியே நின்னேன் தெரியுமா ..
ஸாரி தனு...
பிளீஸ் ஸாரி....
சரி ஒகே நான் மன்னித்து விட்டேன்.
அப்டின்னா எனக்கு கேலக்ஸி சாக்கலட்டு வாங்கி தரனும்.
ம்ம் டபிள் ஒகே நாளைக்கு வாங்கி வந்து கொடுத்து விட்டு போகிறேன். என சொல்லி இருவரும் போன் வைத்தனர்.

இங்கே சித்தார்த் இதன்யாவின் போனில் ஒரு ஹேக் அப் வைத்து இருந்தான் அவளுக்கு வரும் செய்திகள் மெசேஜ் படிக்க கால் யாருடன் பேசுகிறாள் என தெரிந்து கொள்ள செட் செய்து இருந்தான்.

இப்போது அதை ஓபன் செய்து பார்க்க அதில் ரிஷி, இதன்யா பேசியது முக்கியமாக அந்த போட்டோ அதை பார்த்து விட்டு வரேன் டி எவ்ளோ திமிர் உனக்கு அவன் கிட்ட பேசுகிறாய்.. அந்த போட்டோ அந்த ரிஷி அவனும் அவனுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை...
உன்னை சும்மா விட மாட்டேன் டி அந்த போட்டோ அதில் ....!!!???
நாளைக்கு சூர்ய உதயம் வரும்போது நான் அங்கே இருப்பேன் டி....!!!!
உன்னை....

தொடரும்....

அது என்னவா இருக்கும் ...?
அந்த போட்டோ ல ரிஷி என்ன அனுப்பி இருப்பான். ..
Comment please, 

Comments

Popular posts from this blog

ஹே சண்டைக்கோழி -1

  விவேகா அவளுடைய நீண்ட கூந்தலை காற்றில் பறக்க விட்டு சல்வார் சுடிதார் அணிந்து கொண்டு அதற்கேற்ற அளவான அழகாக தயாராகி பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டிருக்க ஆதி அவளை ஆஃபீஸ் பஸ்சில் எற கதவு திறக்கிறான் அந்த பஸ்சில்  software solutions என நினைத்து கொண்டு ஏறினாள் ஆனால் அது போலீஸ் ஜீப்ஆக மாறி காவல் நிலையம் கமிஷனர் ஆஃபீஸ் போய் நிற்கிறது. ஆதி..........ஆதி.....ஆதி..... என கத்திகொண்டே எழுந்தாள்.  அது கனவு தான்  என்று அப்போது தான் தன்னிலைக்கு வந்தாள் வானம் செவ்வானம் ஆக மெதுவாக சூரியன் தன் தேர் குதிரைகளை வலம் வர தயராக்கினான் அதி காலை 5.30 மணி இருக்கும் இங்கு விவேகா எழுந்து உட்கார்ந்து கண்களை தேய்க்க அப்போது தான் தெரிந்தது அது கனவு என்று வந்தாள் விவேகா-எதுக்கு வருண் இந்நேரத்தில் அலாரம் வச்சு என்ன இங்க ஓட விட்டு சாவடிக்கிற (வருண் விவேகாவின் அண்ணன்) வருண்- எனக்கு கம்பெனி க்கு ஆள் இல்ல மா அது தான் விவேகா- நீ அதிதி க்கு போன் பண்ணி ரெண்டு பேரும் ஓடி practise பண்ணுங்க இல்லனா அப்டியே ஓடிடுங்க வருண்-விவேகா அடி வாங்க போற விவேகா-பின்ன என்ன டா நீ IPS  ஆக நான்...

EPI -17 ஹே சண்டைக்கோழி

இன்பா-என்னோட நிம்மதியே உன்னால தான் டி போச்சு  என்று மனதில் நினைத்து கொண்டவன் முதலில் தன் அம்மாவிற்கு போன் செய்தான். வசுமதி- சொல்லு ராகவ் இன்பா-அம்மா இங்க காலேஜ் ல management ல பெரிய fault மா  வசுமதி-என்னாச்சு ராகவ் இன்பா-நடந்த விஷயம் கூற தேவையான தகவல் மட்டும் கூறினான் வசுமதி-இதை கேட்டு மிகவும்  கோபபட்டார் ராகவ் விடு டா எங்க அண்ணா கிட்ட பேசி நாளைக்கே இதுக்கு solution கொண்டுவறேன் இன்பா-சரி மா என்று வைத்து விட்டான். மித்ரன்-சரி வாடா சாப்பிடலாம்  இன்பா-நான் வரல டா என்று மிகவும் வலி நிறைந்த குரலில் கூற  மித்ரன்-விடு மச்சி உன்னோட டார்ஜிலிங் உனக்கு நிச்சயமாக கிடைப்பாள் நான் என்னால் முடிஞ்ச help பண்றேன் டா என்று கூற இன்பா அணைத்து கொண்டான் இப்போது மித்ரன்-அப்போ எக்ஸாம் monday வச்சுக்கலாம் டா நாம்ப போய் சொல்லிட்டு வரலாம் டா இன்பா-மித்ரன் எல்லா கிளாஸ் கும் போய் சொல்லு last ஆ விவேகா கிளாஸ் க்கு  போய் சொல்லிக்கலாம். இனிமே தான் இன்பாவோட game start ஆகுது என்று கூறியவன் அவளுடைய வகுப்புக்கு அந்த நாள் செல்லவே இல்லை எங்கே மீண்டும் சென்றால்  விவேகா...