நீங்கள் எதற்கு என்னை நம்ப வேண்டும். என்னை பற்றி உங்களுக்கு என்ன .... என்று இதன்யா சொல்லி திரும்ப சித்தார்த் காரின் கதவுகளை லாக் செய்தவன். அவளை நெருங்கி இப்போ என்ன சொன்ன... என்று அவள் முடிக் கற்றையை ஒரே ஒரு விரலால் ஒதுக்கி விட அவள் ஒரு நிமிடம் அப்படியே விலவிலத்து போனாள்.
அவனது விரலின் தீண்டல் இவளுக்கு மின்சாரம் பாய்வது போல் இருக்க அதோடு அவன் நில்லாமல் ஹே சொல்லு ...என அவள் கண்ணாடியை கழட்ட இதற்கும் மேல் இங்கு இருந்தால் எதுவும் சரிப்படாது என நினைத்தவள். கதவின் பக்கம் திரும்பி வேகமாக திறக்க போக சித்தார்த் சாதாரண பார்வையில் டோர் லாக் ஆகி இருக்கு... என்று சொல்லி கொண்டே அவளை தன் புறம் திருப்ப அவள் அவனை ஏர் எடுத்து பார்க்க மிகவும் சிரமப்பட உடனே அவளின் முகத்தை பற்றி தன் ஒரு விரலில் நிமிர்த்தியவன் இதண்யாவை பார்த்து கொண்டே அவ கிட்ட எல்லாம் சொல்லிட்டியா.....
ம்ம் சொல்லு ....
யா... யாரு கிட்ட என்ன சொன்னேன்.., அவ தான் உன்னோடே தோழி, நண்பி, ப்ரெண்ட் கோகுல பிரியா என அவன் சொல்ல
நான் ஒன்னும் சொல்லல....
ஹே உன்னோட மொத்தமும் எனக்கு தெரியும் ஐ மின், நீ என்ன நினைக்கிறாயோ அதெல்லாம் ஐனோ எவெரி திங்க் ...
இப்போது ஒன்றும் சொல்ல முடியாமல்
ம்ம்ம் கொஞ்சம் சொன்னேன் வேற ஒன்னும் இல்லை....
அப்போ உனக்கு எது நடந்தாலும் அவ கிட்ட போய் சொல்லி விடுவ ....
ம்ம்ம்ம் ஆமா என மிகவும் மெதுவான குரலில் இவள் சொல்ல அப்போ இதையும் போய் சொல்லு என்று இதன்யாவின் அறிகில் வந்த சித் அவளின் பின்ன தலையை சாய்த்து அவன் முகத்துக்கு அரிகில் கொண்டு வந்தவன் அவள் மூக்கோடு அவனது மூக்கை உரசி அவள் இதழ்களை தன் விரல் கொண்டு வருடி விட அவளுக்கு உள்ளே ஒரு பூகம்பம் வந்தது போல உடல் எல்லாம் சிலிர்க்க இதயம் வேகமாக படபடக்க ஆரம்பித்தது.
ஹே என்னை பாரு.... சீ மீ .... என்னோட ஐ ய பாரு என இவன் சொல்ல இவள் பார்வை கீழ் இருக்க அவளது சுவாசம் சூடாக தொடங்கியது. என்னை விடுங்க .... என்ன பண்றீங்க நீங்க .... நான் என்ன பண்றேன்.... என்று சொல்லியவன் அவளை எதுவும் செய்யவில்லை அப்படியே ஒரு இரண்டு நிமிடம் கழிந்தது மௌனம் மட்டுமே எதுவும் நடக்கவில்லை சித்தார்த் அவளை எதுவும் செய்யவில்லை.
சித்தார்த்துக்கு இதன்யாவின் இதய துடிப்பு அவளை மீறி வெளியே கேட்க "லிட்டில் ஹார்ட் "என மனதில் சொல்லிக்கொண்டான். இதன்யாவை சுற்றி சித்தார்த்தின் வாசனை அவனது மூச்சு காற்றின் சத்தம் மட்டுமே கேட்டது. அவளது பார்வை இவனை தீண்டவில்லை (பார்க்கவில்லை) ஆனால் சித்தார்த்தின் பார்வை அவளை ஒவ்வொரு நொடியும் தீண்ட அவளின் தீண்டாத பார்வைக்கு அவன் ஏங்கினான்.
அவள் மனதில் முருகா.. முருகா... முருகா... முருகா.... இந்த ஒரு வருஷம் இந்த ஒரே வருஷம் தான் b. Ed முடிச்சிட்டு நான் எந்த பிரச்சனையும் இல்லாமல் என்னோட கனவை நோக்கி போய் விட வேண்டும் என்று மனதில் கூறிகொண்டாள்.
ஆனால் b. Ed இரண்டு வருடம் அவள் படிக்கும் வருடத்தில் மாற போவதை அவள் அறிய வில்லை.
அவளை விட்டவன் இப்போ நம்பறேன் நீ அது (லெஸ்பியன்)இல்லை என்று மெலிதாக சிரித்து கொண்டே அவளை விடுவிக்க வேக வேகமாக சென்று விட்டாள்.
சித்தார்த் அவள் சென்ற திசையை பார்த்து லிட்டில் ஹார்ட் தான் அது எப்போதும் எனக்கு தான் என்று சொல்லிக் கொண்டே தன் காரை காலேஜ் நோக்கி கிளப்பினான்.
ஆம் அவளை ஹாஸ்டலில் விடுவதற்காக தான் வந்தான் இப்போது அவன் வேலைகளை ஆரம்பித்தான்.
பெங்களூரில் மிகப்பெரிய ஒரு உயர் ரக தங்கும் விடுதியில் தன்னுடைய சில பாகங்கள் மட்டும் மறைத்து இருக்கும் அந்த நீச்சல் உடையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாசி (மூக்கு), உதடுகள், மார்பகங்கள்,நட்டு வைக்கப்பட்ட புருவங்கள் , என இயற்கை தேகத்தை செயற்கை ஆக்கி ஒரு மெழுகு பொம்மை போல் ஒரு ஆடவனை நோக்கி ஒயின் கோப்பையுடன் சென்றாள்.
மெலினா ஜார்ஜ் யார் அவள் ???
அவள் தான் சித்தார்த்தின் காதலி முன்னால் காதலி என்று சொன்னால் சரியாக இருக்கும்.
Jk ராவ் அவனும் சித்தார்த் போல வாரிசு நடிகன் வளர்ந்து வரும் நடிகர் சித்தார்த்தை விட வெள்ளித்திரையில் புகழின் உச்சிக்கு சென்று கொண்டு இருப்பவன் ஆனால் அவனுக்கு குடும்பம் குழந்தை என அனைத்தும் நிறைவான வாழ்க்கை தான் ஆனால் ஆசை யாரை விட்டது.
மெலினா ஜெகதீஸ நோக்கி தான் தன்னுடைய மாய புன்னகை கொண்டு நடந்து வர அவளை ஒரே இழுப்பில் தன் மேல் இழுத்து கொள்ள ஹே... Jk என அவள் கூறும் முன்னவே அவள் உதடுகளை தனக்கு விருந்தாக்கி கொண்டு இருந்தான் . ஜெகதீஷ் கஜேந்திரா என்கிற பெயரை Jk என வைத்து கொண்டான். எதற்கு லீனா அவனுடன் இருக்கிறாள். வேறு எதற்கு அவன் ஒரு சமகால படத்தை எடுக்க திட்டமிட்டு அதற்கான புரோடெக்சன் வேலைகள் எல்லாம் ஆரம்பிக்க இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் இப்படி ஒரு மீட்டிங்.
மெலீனாவை பார்த்து உனக்கு நான் பெட்டர் ன்னு தோணுதா இல்லை அந்த****சித்து வா என்று சொல்லி கொண்டே அந்த ஒயினை எடுத்து அவள் மேல் ஊற்ற ஹே Jk நான் எப்போ அப்படி சொன்னேன் நீ என்னை பண்ணது போல் என்னை அவன் நாட் வொர்த் Jk என்று கூறியவள். அவனின் மேல் ஒரு பாம்பை போல் அவளுடைய உடலை சுற்றி இப்போ ஐ நீட் யூ என்று கூற அவன் தட்ஸ் மை கேர்ல் என அவளை மோக பார்வை கொண்டு அள்ளி அணைத்து கொண்டு அறைக்கு சென்றான்.
ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ வேண்டும் தன் அப்பாவை போல் இருக்க கூடாது என்று தன் சுயத்தை ,தன் இயல்பை ,தன் படிப்பு ,அழகு ,ஒழுக்கம் என அனைத்தையும் மெலீனாவுக்காக அவள் காலடியில் வைத்து ஒரு அடிமையை போல் அவளுக்காக காதலுக்காக ஏங்கினான் சித்தார்த் ஆனால் அவனுக்கு கிடைத்தது துரோகம் மட்டுமே...
இங்கு சித்தார்த் தன் காலேஜ் நுழைந்த உடனேயே தாராவிடம் இருந்து போன் வந்தது. தாரா வளர்ந்து வரும் நடிகை சித்தார்த் நடித்த (a+b)2 படத்தின் நாயகி சித்தார்த்தின் நெருங்கிய தோழி ஆவாள். சித்தார்த், குரு பிரகாஷ் ரெட்டி, தாரா மூவரும் நெருங்கிய நண்பர்கள்.
ம்ம் சொல்லு தாரா....
சித்து எங்கே இருக்க ....
நான் இங்கே TN ல தமிழ் நாட்டில் இருக்கேன். என்ன விஷயம்...
இல்ல நத்திங் டா...
ம்ம் சொல்லு ...
லீனா Jk கூட ஒரு மூவி கமிட் ஆகி இருக்கா ...
ம்ம் ஓகே அதனால் இப்போ என்ன என்று ஒரு கசந்த புன்னகை சிந்தினான்.
இல்ல டா நீ அவ கிட்ட என அவள் சொல்லும் நேரம் ஸ்டாப் இட் தாரா.... இந்த ஒரு வருஷம் சரி அதற்கு முன்னாடியும் சரி என்னையும் அவளையும் வச்சு வெறும் காசிப்ஸ் மட்டும் அந்த கோசிப்ஸ் ல அவளை பற்றி பேசி பிரபலம் ஆகி இப்பொ பாலிவுட் அடுத்து ஹாலிவுட் தான் அதற்கு தானே என்னை use பண்ணி தூக்கி போட்டாள்.
நானும் அவ கிட்ட இது தெரியாமல் slave (அடிமை) மாறி சுற்றி கொண்டு இருந்தேன் குரு என்கிட்ட அப்போவே சொன்னான் ஆனால் நான் என்று அவன் உதடுகளை மடித்து கடித்து கொண்டவன் அதற்கும் மேல் ஒன்றும் பேச வில்லை .
நான் TN வரதுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி இருந்த சித்தார்த் இல்லை இப்போ நான் வேற ஒரு சித்தார்த் I hate her name , I hate every thing memory for her என கோபமாக கூறி வைக்க போக சாரி சித்து .... ஒரு சிறு அமைதிக்கு பின் ம்ம் டேக் கேர் என்று கூறி போன் வைத்தவன் அதற்கும் மேல் இனி என்ன நடக்கும் என்று தெரியும் அதனால் அவன் போனை சைலண்ட் ல போட்டவன் வேண்டாம் என்று அணைத்து வைத்து விட்டான்.
இதற்கும் மேல் வேலையில் கவனம் வர வில்லை அதனால் தன் வீட்டுக்கு ஆறுதல் மருந்தை தேடி சென்றான். தன்னை மறக்கும் அளவுக்கு குடித்தவன் நினைவில் லீனா இல்லை இதன்யா இருந்தாள்.
"லிட்டில் ஹார்ட்"
என்று அவனுடைய இதயத்தை வருடி" இங்கே பெயினா இருக்கு டி "
என்னன்னு தெரியலை என்று நா குழற தன் கண்கள் தரையை பார்த்து கொண்டே
ஹே என்னன்னு தெரியலை டி உன் கூட இருந்தால் அது என்னை நானே நிஜமா ட்ரூ வா....நீ என் கூட இருப்பியா.... இருக்கணும்.. இப்போ இனி எப்போவும் நீ எனக்கு தான்...
நான் உன்னை எங்கேயும் போக விட மாட்டேன் உன்னை என்னோட நெஞ்சு கூட்டில் வைத்து அடைத்து கொள்வேன்
என்று கூறி அவன் இன்னொரு பாட்டில் ஒயின் எடுத்து வாயில் சரித்தவன்.
கண்கள் சொருகி கிடக்க இதன்யாவின் முகம் அவள் தன் கண்ணாடியை சரி செய்வது போல் அவன் மன கண்ணில் ஓட உனக்கு அதிகமான சந்தோஷத்துக்கும் சரி உன்னோட கஷ்டம் , கோபம் எல்லார்துக்கும் நான் தான் காரணமா இருக்கணும் நீ....என அவன் நிதானத்துடன் அங்கே உள்ள மது பாட்டில்கள் அனைத்தையும் தள்ளி உதைத்தான்.
******
புன்னகையுடன் மதுவை குடித்து கொண்டு இருந்தான் நவீன் குமார். மோகன் அருகில் நின்று கொண்டு இருக்க... நவீன் இந்த நியூஸ் நாளைக்கு ஃப்ளாஷ் நியூசா!..
ம்ம் ஆமா சார்... என கூறி கொண்டு இருந்தான். லக்கி கேர்ள பைண்ட் பண்ணியாச்சா!..
சார் என புரியாமல் அவன் விழிக்க..
நவீன், என்னோட லக்கி சார்ம் தன்யா எங்கே அவள் வாசத்தை நிறைத்த இந்த சுவாசம் அதனால் எனக்கு எவ்ளோ பிராபிட் தெரியுமா!
மோகன் சொன்னால் தானே தெரியும் என முணுமுணுக்க ...
யூ புல் சிட்... இப்போ ஒரு பெரிய கார்ப்பரேட் கம்பெனி கூட டை அப் பண்ணி காஸ்மெட்டிக் புரோடெக்ட் ரிலீஸ் பண்ண போறோம் அதுல ஃபர்ஸ்ட் "தன்யா ஹேர் வாஷ் ஷாம்பூ"ஃபெனுக்ரீக் மேஜர் மெட்டீரியலா சேர்க்க சொல்லி இருக்கேன். நிச்சயம் ஹிட் அடிக்கும்.. என கூறியவன்.
எப்போ கண்டு பிடிப்ப? கூடிய சீக்கிரம் சார் லிஸ்ட் ரெடி ஆகிடுச்சு இனி ஒன் மந்த்!..
கம் அகைன்! என அவன் கர்ஜிக்க..
சார் அட்லீஸ்ட் 15 டேஸ் கொடுங்க சார் பிளீஸ் என மோகன் கெஞ்சிட..
நவீன்,10 டேஸ் ஃபைனல்.. அவளை கூடிய சீக்கிரத்தில் அவளை அடையவேனும்.
மோகன், சார் இன்னொரு விஷயம்...
என்ன?
சித்தார்த் சார் போன கார் ஆக்சிடன்ட் கேஸ் ஃபைல் ஆகி இருக்கு... கம்பளைன்ட் பண்ணி இருக்காரு!..
நவீன் இளனமாக நல்லா தானே இருக்கான். அப்புறம் எதுக்கு கேஸ்!.
மோகன், அவர் தனியா இல்ல சார் அவர் சாட்சியா இருக்காரு அவரு கூட வந்த பொண்ணு தான் கம்பிளைன்ட் கொடுத்து இருக்கு...
பொண்ணா!..
ம்ம் ஆமா சார் டீச்சர்! என மோகன் சொல்ல..
யார் அது?..
தொடரும்..
Comment pannunga like share pannunga... இந்த epi ல உங்களுக்கு சித்தார்த்தை பிடிக்குமா இல்ல இதன்யாவை பிடிக்குமா!..
Comments
Post a Comment