Skip to main content

EPI - 14 பெண் மீன் விழியில்

பொண்ணா!.. 

ம்ம் ஆமா சார் டீச்சர்! என மோகன் சொல்ல.. 

யார் அது? அவ்ளோ முக்கியத்துவம் கொடுக்கிறான். என நவீன் குமார் கேட்க.. 

தெரியல சார்...என மோகன் சாதாரணமாக சொல்ல.. 

வாட் தெரியலயா!.. 

மோகன், சார் சித்தார்த் சார் கொஞ்சம் இறக்கம் உள்ளவர் எதிரிக்கு எதிரி த்ரோகிக்கு துரோகி மற்ற படி என அவன் சொல்ல வர... முடியாமல் தத்தலித்தான் அந்தரத்தில பறந்து கொண்டு இருந்தான். 

நவீன் குமாருக்கு அவன் பேச பேச உள்ளுக்குள் கோபம் கொதித்து எழ அவனை தூக்கி இருந்தான். 

ச.. சார்.. சார் என முக்கி கொண்டே அவன் பேசிட சாரி சார் என அவன் கெஞ்ச நவீன் அவனை விட அந்தரத்தில இருந்து தொப்பென கீழே விழுந்தான். 

உடல் நடுக்கம் கண்டது. நவீன் அவனை பார்க்க சார் சார் சாரி சார் இனி இப்படி பேச மாட்டேன். என சொல்லி தன்னை அசுவாச படுத்தினான். 

நவீன், சீக்கிரம் என்னோட பேபி யை கண்டு பிடிக்கும் வழிய பாரு.. என சொல்லி கொண்டே வேகமாக அவனது பெரியப்பாவை பார்க்க சென்றான். 

      *****

இதன்யா என்ன செய்கிறாள்.

இதன்யா காரில் இருந்து மூச்சு வாங்க இறங்கி வந்தவள் நினைவில் சித்தார்த் மட்டுமே இருந்தான்.

அவன் மூச்சு காற்று அருகில் வீசுவது போலவும் சித்தார்த் மூக்கோடு மூக்கு வைத்து உரசிய அந்த இடம் குறுகுறுக்க ஆரம்பித்தது.

அய்யோ என்னாச்சு எனக்கு அவன் ...அவன் நினைப்பாவே இருக்கே!  அந்த மூக்கின் மீது விரல் வைத்து தீண்டி பார்த்தாள்.
நேராக படுக்கையில் போய் சோர்வாக விழுந்தவளின் எண்ணம் முழுவதும் சித்தார்த் தான் இருந்தான்.

அவனது மூச்சு காற்று இவள் மேல் வீசுவது போல் தோன்ற ஒரு நிமிடம் உடலில் எல்லா இடங்களிலும் இரத்தம் வேகமாக பாய்ந்தது. உள்ளுக்குள் ஒரு மின்சாரம் தான்

தன் எண்ணத்தை வேறு ஒன்றின் மீது செலுத்த வேண்டும் என்று நினைத்தவள் அந்த புதிய ஃபோனில் தன் அம்மா, அக்கா, அண்ணா, தன் மாமா வீடு என அனைவரிடமும் பேசி தன்னை இயல்பாக காட்டி கொள்ள முயற்சி செய்தாள்.

இரவு ஆக இதன்யாவுக்கு நித்திரை தான் வர வில்லை அது தான் மொத்தமாக சித்தார்த் கிட்ட தொலைத்து விட்டாளே.

பிளீஸ் தூங்கு டி அவனை நினைக்காதே அவன் உன்னை ரிவெஞ் பண்றான்.

ரொம்ப ரொம்ப கெட்டவன் டி என மூளை சொல்ல
மனமோ இல்லை உன்னோட உயிரை காப்பாற்றி இருக்கிறான் அவன் கொஞ்சம் தான் கெட்டவன் ரொம்ப ரொம்ப நல்லவன் டி

இல்லை இல்லை இப்போ நான் என்ன செய்யட்டும் முருகா நீ தான் ஹெல்ப் பண்ணனும் பிளீஸ் டார்லிங் என்று தமிழ் கடவுளிடம் ஆங்கிலத்தில் உதவி கேட்டு கொண்டு இருந்தாள் இதன்யா

இங்கு சித்தார்த் தன் சுய நினைவை இழந்து அந்த ரூமில் தனியாக புலம்பி கொண்டே படுத்து இருந்தான்.
சிறிது நேரத்தில் ரிஷி வந்தான் அவனை கை தாங்களாக கூட்டி சென்று போதை தெளிய வைக்க போக

சித்தார்த் லிட்டில் ஹார்ட் எனக்கு வேணும்டி
நீ எனக்கு மட்டும் தான்
நீ என்னை மட்டும் தான் விரும்பனும் யாரையும் பார்க்க கூடாது டி என
பின் லிட்டில் ஹார்ட்....
லிட்டில் ஹார்ட்....
லிட்டில் ஹார்ட்...
லிட்டில் ஹார்ட் என தமிழில் உளற ரிஷிக்கு ஒரு நிமிடம் ஆச்சர்யம் சந்தேகம் இரண்டுமே வந்தது.

யார் அந்த லிட்டில் ஹார்ட் சித்தார்த் தமிழில்  உளரும் அளவுக்கு இவர் மனதில் இடம் பிடித்தது என நினைத்து கொண்டே அவனை குளியலறை கூட்டி சென்று குளிக்க வைத்து எதுவும் சாப்பிடாமல் இருந்தால் சாப்பாட்டை ஊட்ட அருகில் சென்றான்.

டேய் ரிஷி ....
சொல்லுங்க சார்....
என்னடா சார் ன்னு கூப்பிடற....
சரி சொல்லுங்க நான் எப்படி கூப்பிடனும் என்று வாயில் உணவு வைக்க அதை மென்று முழுங்கி கொண்டே மாமான்னு கூப்பிடு
நீ ரோஷினிய கல்யாணம் பண்ணா என்னை மாமான்னு தான் கூப்பிடனும்....
ரிஷி அவன் இருக்கும் மன நிலையில் எதுவும் பேச விரும்பாமல் ம்மம் மாமா...
குட் பாய்... என அடுத்து உணவை வாங்கியவன் அப்போ என்னோட வைவ் உன்னை எப்படி கூப்பிடனும்....
நீங்கள் அமைதியா சாப்பிடுங்க பிளீஸ்
டேய் சொல்லு டா ....
இல்ல என்று இவன் எழ போக ...
சரி சொல்றேன் பிளீஸ் இந்த ஒரு வாய் என சொல்ல முதலில் நீ சொல்லு ...
அவங்க எனக்கு சிஸ்டர்... அப்படின்னா என்ன டா .. தங்கை போதுமா
நான் எப்டி உன்னை கூப்பிட சொன்னேன்.
ம்ம் சரி மாமா அவங்க எனக்கு தங்கை போதுமா..
ம்ம் அதே நினைப்பு தான் உன் மனசுல இருக்கணும் காட் இட் அவ உனக்கு தங்கை எனக்கு கூடிய சீக்கிரத்தில் என சொல்லி கொண்டே அப்படியே உறங்கி போனான்.
யார் இது லிட்டில் ஹார்ட் இவருக்கு அவ்ளோ முக்கியமான ஒருவர் என்று மனதில் நினைத்தவன் சிதார்த் நடுவில் எழுகிறானா என பார்க்க அருகில் அமர்ந்து பார்த்து கொண்டே உறங்கி விட்டான்.
அடுத்த நாள் காலை எழுந்தவுடன் தான் அவனுக்கு தலை வலிக்க அந்த வீட்டில் சித்தார்த்தின் தாத்தாவுக்கு விசுவாசமாக வேலை செய்யும் இரு ஆட்கள் சரசம்மா, முத்து இருவர் தான் இன்னும் ஒரு 50பேர் அந்த அரண்மனை போல் இருக்கும் வீட்டில் வேலை செய்கின்றனர்.
ரிஷி சரசுமாவிடம் தலைவலி சரியாக கஷாயம் வாங்கிக் கொண்டு மேலே வந்தான்.
ரிஷியை பார்த்ததும் தான் சித்துவிர்க்கு எல்லாம் நியாபகம் வந்தது.
சார் இந்தாங்க என்று கொடுக்க
சித்து அவனை முறைக்கும் பார்வை பார்த்து விட்டு என்னனு கூப்பிட்ட நீ .....
அவன் கேள்வியாக சார்....
உன்னை நான் மாமா அப்டின்னு கூப்பிட சொன்னதாக எனக்கு நியாபகம்!
ரிஷி அவனை அதிர்ச்சியாக பார்த்து விட்டு இப்போது வேறு வழி இல்லாமல் ச சரி மாமா.... என சொல்ல
ம்ம்ம்.. என்று அந்த கஷாயத்தை வாங்கி ஒரே மூச்சில் குடித்தான்.
பின் வேகமாக அனைத்து செய்தி தாள்கள் எடுத்து ஆங்கிலம், கன்னடம்,  மொழி தாள்கள் எடுத்து என்ன செய்தி என பார்க்க சித்து நினைத்தது போலவே சித்துவும், மெலீனாவும் கொஞ்சம் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படம் பார்த்து விட்டு அவன் அதிர்ச்சி ஆக வில்லை.
இது ஆறு மாசத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு நெருக்கமான செல்பி....
சித்துவின் மனதில் நான் நெனைச்சேன் டி ,நீ *** என சில வார்த்தைகள் உபயோகித்து விட்டு, வலைதளம் சென்றவன் அங்கும் அதே போல் சில வற்றை பார்க்க மனது கவலை அடையவில்லை இப்போது கோபம், வெறுப்பு, ரணம் மட்டுமே இருந்தது.
உடனே குரு பிரகாஷ்க்கு ஃபோன் செய்தவன் வலை தளத்தில் உள்ள சித்து மெலீனா தொடர்பான அனைத்து செய்திகளையும் நீக்கினான்.

மெலினா ஏன் இவ்வாறு செய்கிறாள். வேறு ஒன்றும் இல்லை அவள் பேசு பொருளாக எப்பொதும் இருக்க வேண்டும்; அவ்வளவு தான்.

ரிஷி மனதில் ஒரே குழப்பம் கேள்வி தான் கேட்டு விடலாமா என தோன்ற சித்தார்த் அவன் முகத்தை பார்த்து ம்ம்ம்...
என அவன் மனதை படித்தது போல் சொல்ல,
அந்த , அந்த லிட்டில் ஹார்ட் யாரு ?
இப்போது சித்தார்த் முகத்தில் ஒரு நிமிடம் மென்மையான சிரிப்பு வந்து விட்டு இதை ரிஷி கேட்டதில் கடுப்பானவன்.
உன்னோட தங்கை.. 
மேகா வா ! என ரிஷி அவனது தங்கையை பற்றி சொல்ல
சித்து அவனை முறைத்தான். இனி எதுவும் கேட்க வேண்டாம் என்று முடிவு எடுத்தவனாக இருந்தான்.

இங்கு காலையில் எழுந்த இதன்யா  தனது போனில் வலை தளம் செல்ல அந்த புகைப்படத்தை பார்த்து விட்டாள்.

மனது ஒரு நிமிடம் கனத்து போனது இதயம் மிகவும் வலிப்பது போல் ஒரு உணர்வு. என்னாச்சு இதன்யா உனக்கு அவன் யாரோடு நெருக்கமாக இருந்தால் உனக்கு என்ன என்று மூளை கேட்க
எனக்கு என்ன .... எனக்கு ஒன்றும் இல்லையே என்று தன் மனது கட்டாயமாக பொய் சொன்னது.

இந்த ஒரு வருடம் ஒரே வருடம் இல்ல இன்னும் பத்து மாதம் தான் அப்புறம் நீ இங்கு இருந்து கிளம்பிவிடுவாய் என மூளை அறிவுரை வழங்கியது.

அவளோடு இவ்வளவு நெருக்கம் காதல் நான் யார் நான் ஒரு சாதாரண பொன்னு அவ பேரழகி உன் கிட்ட அவன் பேசியதே உலக அதிசயங்களில்  ஒன்னு.

இல்ல ,இல்ல, இதன்யா இப்படி நினைக்காதே ,பிரியா சொன்னது மனசுல வைத்து கொள் என்று தன்னை சரி செய்து கொண்டு இனி அவன் மேல் நம் எண்ணம் போக கூடாது என்று பள்ளி கிளம்பினாள்.

சித்தார்த் இன்று தன்னை எதுவும் பாதிக்க வில்லை என்பது போல் பள்ளி வந்தான். இதன்யாவும் வந்தாள். அவளுக்கு கொடுக்கப்பட்ட காலஅட்டவணை படி நேராக 11ம் வகுப்புக்கு சென்று பாடம் நடத்த ஆரம்பித்தாள்.

இன்று சித்தார்த்துக்கு கொஞ்சம் பாதுகாப்பு அதிகமாக இருந்தது என்ன தான் வலை பக்கங்களில் இருந்து படத்தை நீக்கினாலும் இந்த பத்திரிக்கைகாரர்கள் எதுவும் செய்தி கிடைக்குமா என அலைந்து கொண்டே இருப்பார்கள்.

இதன்யா காலை மூன்று வகுப்பு முடியும் வரை வகுப்பில் இருந்து வெளியே வரவே இல்லை. இங்கு சித் மனம் கொஞ்சம் கவலை காலையில் இருந்து அவனுடய லிட்டில் ஹார்ட் அவன் கண்ணில் படவே இல்லையே மதியம் சாப்பிடும் போது பார்த்து கொள்ளலாம் என விட்டு விட்டான்.

மதியமும் ஆனது வழக்கம் போல் ரிஷி உணவை கொண்டு வர அவனிடம் நான் உன்னை காலேஜ் தானே போக சொன்னேன். இங்கே என்ன பண்ற என்பது போல் ஒரு பார்வை பார்க்க,

இப்போ கிளம்பிவிடுவேன் ஸார் என்று கூறி பின் மாமா என்று அழைக்க ம் கிளம்பு நான் வரேன், நீ முதலில் போ ...

ரிஷி இப்போது வெளியே சென்றவன் நேராக இதன்யாவை பார்க்க சென்றான். அவள் கைகளில் ஃபோன் வைத்து இருப்பதை பார்த்து என்ன தனு புது ஃபோன் என சொல்ல இதன்யா ஃபோனை அவனிடம் நீட்டினாள்.

சீனியர் இது என்று சித்தார்த் கூறிய அனைத்து விஷயமும் கூற அவனுக்கும் இது தெரிந்த விஷயம் தான் அதனால் சந்தேகம் வர வில்ல.

ரிஷி தன் எண் கொடுக்கலாமா என யோசித்து கொண்டே இருக்கும் நேரம் அவளே கேட்டாள். ரிஷி சந்தோஷமாக தன் எண்ணை அதில் பதிவு செய்தவன் ஒரு மிஸ்டு கால்  விட்டு தன் போனில்  பதிவு செய்து கொண்டான்.

உடனே ரிஷி அவளிடம் தனு என்னோட PhD வேலையை ஆரம்பிக்க போகிறேன். சூப்பர் சீனியர் வாழ்த்துக்கள். எனக்கு சாக்லேட் என கேட்க அந்த galaxy சாக்லேட் எடுத்து நீட்ட அவள் சந்தோஷமாக வாங்கி கொண்டாள்.

தனு அப்போ அப்போ கொஞ்சம் மெசேஜ் பண்ணு
ம்ம் ஓகே என்று சிரித்த முகத்துடன் சொல்ல ரிஷி பிரிய மனம் இல்லாமல் பிரிந்தான்.

இதை எல்லாம் ஒருவர் கோவகண்களால் பார்த்து கொண்டு இருந்தான்.
இதன்யா அந்த சாக்லேட் எடுத்து கைகளில் வைத்து கொண்டு பார்த்து கொண்டு இருக்க அவள் போன் அலர யார் என்று பார்க்க யார் என தெரிய வில்லை.

ஹலோ யாரு?
சித் மனதில் ( நான் உனக்கு யாரா ... இருக்கட்டும் இங்கே வாடி உன்னை...)
ஹே சர்வ் பண்ண வா என சொல்லி கட் செய்தான்.

இப்போது என்ன செய்ய என்று யோசித்தாள் எப்படியும் பரிமாரவில்லை என்றால் நிச்சயம் எதுவும் செய்வான் என்று நினைத்தவள் வேறு வழயில்லாமல் சித்தார்த்தின் அறைக்கு முன் சென்றாள்.

அவள் உள்ளே வர வில்லை என தெரிந்து கொண்டவன் மீண்டும் ஒரு அழைப்பு விடுக்க இப்போது அதை எடுக்கும் முன் கதவை தட்டி விட்டு உள்ளே சென்றாள்.

ம்ம் இன்னிக்கு நேற்றை விட நல்லா தான் இருக்க தினமும் எனக்கு புதுசு புதுசா தெரியற டி....

தொடரும்....

Comment pannunga ratings konjam பிடித்து இருந்தால் உங்க friends kku  share pannunga.. 





























Comments

  1. IT gives the same feel while reading another time too.. Interesting to read again,💕💕💕💕💕

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஹே சண்டைக்கோழி -1

  விவேகா அவளுடைய நீண்ட கூந்தலை காற்றில் பறக்க விட்டு சல்வார் சுடிதார் அணிந்து கொண்டு அதற்கேற்ற அளவான அழகாக தயாராகி பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டிருக்க ஆதி அவளை ஆஃபீஸ் பஸ்சில் எற கதவு திறக்கிறான் அந்த பஸ்சில்  software solutions என நினைத்து கொண்டு ஏறினாள் ஆனால் அது போலீஸ் ஜீப்ஆக மாறி காவல் நிலையம் கமிஷனர் ஆஃபீஸ் போய் நிற்கிறது. ஆதி..........ஆதி.....ஆதி..... என கத்திகொண்டே எழுந்தாள்.  அது கனவு தான்  என்று அப்போது தான் தன்னிலைக்கு வந்தாள் வானம் செவ்வானம் ஆக மெதுவாக சூரியன் தன் தேர் குதிரைகளை வலம் வர தயராக்கினான் அதி காலை 5.30 மணி இருக்கும் இங்கு விவேகா எழுந்து உட்கார்ந்து கண்களை தேய்க்க அப்போது தான் தெரிந்தது அது கனவு என்று வந்தாள் விவேகா-எதுக்கு வருண் இந்நேரத்தில் அலாரம் வச்சு என்ன இங்க ஓட விட்டு சாவடிக்கிற (வருண் விவேகாவின் அண்ணன்) வருண்- எனக்கு கம்பெனி க்கு ஆள் இல்ல மா அது தான் விவேகா- நீ அதிதி க்கு போன் பண்ணி ரெண்டு பேரும் ஓடி practise பண்ணுங்க இல்லனா அப்டியே ஓடிடுங்க வருண்-விவேகா அடி வாங்க போற விவேகா-பின்ன என்ன டா நீ IPS  ஆக நான்...

EPI -17 ஹே சண்டைக்கோழி

இன்பா-என்னோட நிம்மதியே உன்னால தான் டி போச்சு  என்று மனதில் நினைத்து கொண்டவன் முதலில் தன் அம்மாவிற்கு போன் செய்தான். வசுமதி- சொல்லு ராகவ் இன்பா-அம்மா இங்க காலேஜ் ல management ல பெரிய fault மா  வசுமதி-என்னாச்சு ராகவ் இன்பா-நடந்த விஷயம் கூற தேவையான தகவல் மட்டும் கூறினான் வசுமதி-இதை கேட்டு மிகவும்  கோபபட்டார் ராகவ் விடு டா எங்க அண்ணா கிட்ட பேசி நாளைக்கே இதுக்கு solution கொண்டுவறேன் இன்பா-சரி மா என்று வைத்து விட்டான். மித்ரன்-சரி வாடா சாப்பிடலாம்  இன்பா-நான் வரல டா என்று மிகவும் வலி நிறைந்த குரலில் கூற  மித்ரன்-விடு மச்சி உன்னோட டார்ஜிலிங் உனக்கு நிச்சயமாக கிடைப்பாள் நான் என்னால் முடிஞ்ச help பண்றேன் டா என்று கூற இன்பா அணைத்து கொண்டான் இப்போது மித்ரன்-அப்போ எக்ஸாம் monday வச்சுக்கலாம் டா நாம்ப போய் சொல்லிட்டு வரலாம் டா இன்பா-மித்ரன் எல்லா கிளாஸ் கும் போய் சொல்லு last ஆ விவேகா கிளாஸ் க்கு  போய் சொல்லிக்கலாம். இனிமே தான் இன்பாவோட game start ஆகுது என்று கூறியவன் அவளுடைய வகுப்புக்கு அந்த நாள் செல்லவே இல்லை எங்கே மீண்டும் சென்றால்  விவேகா...

18) பெண் மீன் விழியில்

தாரா சித்தார்த்தை பார்க்க வந்து இருந்தாள்.  தாரா இதன்யாவை பற்றி கேட்க, உடனே ஷி இஸ் நாட் ஜில்லு... ஷி யிஸ் லிட்டில் ஹார்ட் அண்ட் வெறி ஹாட்... என சித்தார்த் சொல்ல தாரா, ஹே சித்து இது நிஜமாவே நீ தானா என்னை ஒரு கிள்ளு கில்லுடா... சித்தார்த் அவளை முறைக்க ஹே சத்தியமா  சான்சே இல்ல ஐ கான்ட் பிலீவ் இட்... இப்போ உனக்கு என்ன பிராப்ளம் என்று அந்த இயற்பியல் புத்தகத்தை புரட்டி கொண்டே சித்து கேட்க, நீ ஒரு வார்த்தை கூட பேச காசு கொடுக்கணும் அப்டின்னு குரு சொல்லுவான்.  அதுவும் இல்லாமல் உனக்கு லீனாவ தவிர யாரையும்.... என தாரா சொல்ல அங்கு அவன் குடித்த லெமன் டீ கப் எடுத்து வீச அது துண்டு துண்டாக நொறுங்கி விழுந்தது. தாரா,பிளீஸ் பிளீஸ் தெரியாம சொல்லிட்டேன் டா .. சித்தார்த் அவன் கைகளை முறுக்கினான். இல்ல டா அந்த லிட்டில் ஹார்ட் யாரு என தாரா சொல்ல அந்த பெயரை கேட்டதும் அவன் உதடுகள் கொஞ்சம் வளைந்தது. உன் கிட்ட சொல்ல முடியாது இப்போ கிளம்பு... ஹே சொல்லு சொல்லு பிளீஸ் டா என அவள் கெஞ்ச..  அவ கெமிஸ்ட்ரி ஸ்டூடண்ட் அவ படிச்சுட்டு இருக்கா... என இழுத்தான்.  ம்ம் பாருடா இன்டரெஸ்டிங் நீ பி...