இன்பா வீட்டில் இருந்து கிளம்பி நேராக காலேஜ் சென்றான்.
ஆதி-என்ன விவி இது என்ன பூ
விவேகா- இது ஒரு பூ தான்
மைதிலி-ஏய் எனக்கு தெரியும் இது மகிழம் பூ இதோட வாசம் சூப்பர் ஆ இருக்கும்
ஆதி- இதுல ஏதோ ஒரு உள் குத்து இருக்க மாறி இருக்கே என்று சிரித்து கொண்டே கூற
விவேகா-ஒன்னும் இல்ல என்று தன் வெட்க உணர்வுகளை மறைத்து கொண்டாள்
ஆதி-இல்ல கண்ணுக்கு மை, கொஞ்சம் free ஹேர் ஸ்டைல், அதை விட மகிழம் பூ இந்த தரிசனம் யாருக்கோ வெய்ட் பண்ற மாறி இருக்கு
எங்கேயோ match ஆகுற மாறி இருக்கே என்று ஆதி கிண்டல் செய்தான்.
அப்போது காலேஜ் ஆஃபீஸ் ரூமில் இருந்து விவேகாவின் வகுப்புக்கு ஒரு பணியாளர் பெயர் பட்டியலுடன் வந்தார்.
மித்ரன் வகுப்பு எடுத்து கொண்டு இருக்க அந்த பணியாளர் அவனிடம் கேட்டு உள்ளே வந்து பேச ஆரம்பித்தார்.
ஹலோ ஸ்டுடெண்ட்ஸ் நான் கூப்பிடற பேர் எல்லாம் எழுந்து ஆஃபீஸ் ரூம் வாங்க என்று கூற
சிவா, வெங்கட், சௌந்தர், சூர்யா, தியா, விவேகா என்று கூறி விட்டு கிளம்ப என்னவாக இருக்கும் என்று சிறு பதட்டதோடு கிளம்பினார்கள்.
அங்கே ஆஃபீஸ் ரூமில் billing செக்ஷன் ல ஒரு பெண் அமர்ந்து கொண்டு நீங்க எல்லாம் இந்த sem க்கு உண்டான எந்த ஒரு fees ம் pay பண்ணல பாதி பேர் pay பண்ணி இருக்கீங்க நெஸ்ட் week மட்டும் தான் time அதுக்கு அப்புறம் fine start ஆகிடும் என்று கூறி பின்
ஒரு 5 மினிட்ஸ் வெய்ட் பண்ணுங்க யார் எவ்ளோ பெண்டிங் ன்னு நான் சொல்றேன் என்று கூறி அனைவரும் குறித்து கொண்டனர்
சிவா-விவி உனக்கு பெண்டிங் கொஞ்சம் அதிகமாக இருக்கு
விவேகா-பார்த்துக்கலாம் விடு என்று கூறி பின் அனைவரும் கவலையான மனநிலையில் வகுப்பறை கிளம்பினர்
விவேகா- நான் rest room போவதாக கூறி செல்ல
தியா அங்கு நடந்த அனைத்து விஷயமும் யாழினி கிட்ட கூற இது தான் நல்ல தருணம் என்று யாழினி, இனியாள், பூரணி மூவரும் ரெஸ்ட் ரூம் சென்றனர்.
உள்ளே சென்றதும் யாழினி ஆரம்பித்தாள்
யாழினி-இனியாள் தியா க்கு fees பெண்டிங் ன்னு சொன்னா அதனால் தான் ஆஃபீஸ் ரூம் கூட்டிட்டு போய் சொல்லி இருக்காங்க டி
பூரணி-ஆமா டி இங்க சில பேருக்கு fees கட்டவே வழி இல்ல இதுல make up ஒன்னு தான் கேடு
யாழினி-ஆமாம் நீ சொல்றது கரெக்ட் தான் இதுக எதுக்கு இங்க படிக்கணும் ஏதாச்சும் டிப்ளமோ அப்டி இல்லனா வேலைக்கு போக வேண்டியது தானே கூட்டி பெருக்க
இனியாள்-அப்டி இல்ல டி இந்த காலேஜ் ல கொஞ்சம் பணம் இருக்க பசங்களா பார்த்து அவளுகளோட வலையில் விழ வச்சு அப்டியே கல்யாணம் பண்ணி settle ஆகறதுக்கு தான் இங்கே வந்திருக்காங்க .
நம்ம மாதிரி அவளுக பணக்கார குடும்பத்தில் பிறக்கல சோ இந்த மாதிரி பணக்காரங்க ஆகிடலாம் னு தான்
சரி வா நமக்கு எதுக்கு தேவை இல்லாத வேலை போகலாம்.
இவர்கள் கூறியது அனைத்தும் கேட்டு கொண்டிருந்த விவேகாவுக்கு மனம் முழுவதும் ரணமாக இருந்தது. சரியாக அந்த நேரம் மோர்னிங் interval க்கு 10 நிமிடம் இருக்க
விவேகா கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு இருக்க நேராக CS block சென்றாள். வெண்பாவை பார்க்க இவள் இறங்கி செல்லவும் இன்பா மேலே செல்லவும் சரியாக இருந்தது . ஆனால் இருவரும் பார்த்து கொள்ள வில்லை
இன்பா மாணவர்கள் பயன்படுத்தும் படிக்கட்டில் சென்றான் . விவேகா மாணவிகள் பயன்படுத்தும் படிக்கட்டில் சென்றாள்.
விவேகா நேராக வெண்பாவின் வகுப்புக்கு செல்ல அங்கு இருந்த அனைத்து மாணவர்களும் விவேகாவை யே வைத்த கண் வாங்காமல் அவள் கண்களையே பார்த்து கொண்டு இருந்தனர்.
சரியாக interval bell அடிக்க விவேகா வெண்பாவை அழைத்து கொண்டு ரெஸ்ட் ரூம் சென்று அவளை கட்டி கொண்டு அழுதாள்.
வெண்பா-என்னாச்சு விவி ஏன் அழற என்னைக்கும் இல்லாமல் இன்னிக்கு சும்மா தேவதை யா இருக்கீங்க மேடெம் என்று அவளை சமாதானம் செய்ய
விவேகா-வெண்பா எனக்கு இந்த make up எல்லாம் remove பண்ணனும் நீ தான் face வாஷ் வச்சு இருப்பியே எடுத்து கிட்டு வா என்று கூற
வெண்பா-ஏய் லூசு ஏன் டி இப்டி பண்ற நல்லா தானே இருக்கு
விவேகா-நீ போய் எடுத்து கிட்டு வா என்று கூற வென்பா எடுத்து வந்தாள் முகத்தை கழுவிய விவேகா பின் வெண்பாவை torture செய்து சாதாரண ஜடை போட்டு எப்போதும் போல ஒரு குட்டி பொட்டு வைத்து கொண்டு
விவேகா-நான் இங்கே வந்தது பத்தி யார் கிட்டயும் சொல்ல கூடாது மித்ரன் அண்ணா கிட்ட வீட்டில் போய் உலரிக்கிட்டு இருக்காத என்று கூறினாள்.
வெண்பா-என்னாச்சு டி உனக்கு ஏன் டி ஏதோ மாரி பேசற
விவேகா-நான் சொன்னது உன்னோட நியபகத்தில் இருக்கட்டும் வெண்பா என்று கூறி கொண்டே அவளது block சென்றாள் விவேகா.
வெண்பா அவள் வகுப்புக்கு வர அனைத்து மாணவர்களும் ஏய் வெண்பா இப்போ ஒரு பொண்ணு வந்ததே
வெண்பா-புருவம் சுருக்கி யாரு வந்தா என்று கேட்க
பசங்க-அது தான் அந்த கண்ணழகி எந்த dept
வெண்பா- அவள பத்தி உங்களுக்கு தெரியாது புரட்டி எடுத்திடுவா
பசங்க-அதை நாங்கள் பாதிருக்கிறோம் நீ சொல்லு
வெண்பா-IT dept
பசங்க-code word accepted என்று அவளை ஒரு முறை சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டனர்.
விவேகா நேராக வகுப்புக்கு வந்து அவளது இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.
ஆதி-விவேகா என்னாச்சு ஏன் இப்படி மாறிட்ட
விவேகா- ஒன்னும் இல்ல ஆதி சும்மா தான் என்று தன் கவலைகள் அனைத்தும் மறைத்து இயல்பாக இருப்பது போல் காட்டி கொண்டாள்.
மைதிலி-விவி என்னாச்சு டி ஏன் எல்லாம் திடீரென chage பண்ணிட்ட
விவேகா-இல்ல லிதி எனக்கு பிடிக்கல அது தான் என்னை நான் feel பண்ணல வேற ஒரு பொண்ணு மாறி எனக்கு தோணிச்சு அது தான்
ஆதி கண்களால் லிதிக்கு கண்ஜாடை செய்து அமைதியாக இருக்க சொன்னான்.
ஆதி-விவேகா ஆஃபீஸ் ரூம் ல fees பத்தி சொன்னதா சிவா சொன்னான்
விவேகா-ஆமா ஆதி இனிமே அந்த compition க்கு ரெடி ஆகறது தான் என்னோட முழு targetம் என்று தண்ணீர் குடித்து தன்னை சாதாரண மாக இருப்பது போல் காட்டிக்கொண்டாள்.
அடுத்த hour ஆரம்பிக்க இன்பா தன்னவளை பார்க்க ஆவலாக வந்தான். ஆனால் அவன் கண்டது விவேகாவின் கலையிழந்த முகம் தான் கண்கள் முழுவதும் சோகம் உயிர்ப்பு இல்லாத பார்வை தான்.
இன்பாவுக்கு என்ன பேச என்று புரியவில்லை சில நிமிடம் கழித்து தன்நிலைக்கு வந்தவன்.நாளைக்கு mock test சோ அதுக்கு prepare ஆகுங்க எல்லா students கும் lunch break ல model question bank கொடுப்பாங்க .என்று கூறினான்.
பின் அனைத்து மாணவர்களும் அவர்கள் நடத்திய பகுதியை போட்டு பார்க்க , படிக்க ஆரம்பித்தனர்.
இன்பாவுக்கு இருப்பு கொள்ள வில்லை .மனதில் காலையில் நன்றாக தானே இருந்தாள் . இப்போது என்ன ஆனது என்று மனம் முழுவதும் பாரமாக இருந்தது.
இன்பா-வைத்த கண் வாங்காமல் விவேகாவையே பார்த்து கொண்டு இருந்தான். ஆனால் விவேகா அவனை ஒரு பார்வை கூட பார்க்க வில்லை.
இரண்டு hours ம் இப்படியே செல்ல அவனும் விவேகா பார்ப்பாளா என்று ஒரு முடிவோடு இருக்க அவளோ இனி எது நடந்தாலும் தன் மனதை கட்டு படுத்தி கொண்டு இருந்தாள்.
உணவு இடைவேளை வந்தது. அனைவரும் என்ன செய்ய என்று அமர்ந்து இருக்க
இன்பா-முகத்தில் கடுமையுடன் கிளாஸ் டிஸ்மிஸ் என்று கூற அனைவரும் மிகவும் பயத்துடன் சென்றனர் இந்த முறை யாழினி, இனியாள் கூட பயந்து விட்டனர்.
இன்பாவுக்கு தன்னவளின் இந்த பாராமுகம் அலட்சியம் கோபத்தை ஏற்படுத்த தான் கொஞ்சம் கடுமையுடன் பேசினான் ஆனால் விவேகா அப்போதும் அசரவில்லை
விட்டால் போதும் என்று அனைவரும் கிளம்ப ஆதி, மைதிலி க்கு இது சரியாக படவில்லை.
விவேகா-ஏய் வா என்று மைதிலி ய எல்லாரும் போறாங்க என்று கூறி கொண்டே அவளது lunch box எடுத்து கொண்டு கிளம்பினாள்.
மைதிலி ஆதியை பார்க்க அவன் மறுப்பாக தலை அசைக்க
மைதிலி- விவி இரு டி தோ வரேன் ஏதோ தேடுவது போல் பாவனை செய்தாள். விவி நீ முன்னாடி போ நான் பின்னால் வருகிறேன் என்று கூறினாள்.
விவேகாவின் கால்கள் தானாக தன் மனம் போன போக்கில் நடந்தாள்.
விவேகா IT meeting hall தாண்டி செல்ல போக ஒரு வழிய கரம் விவேகாவை மீட்டிங் ஹாலுக்குள் இழுத்து கொண்டு சென்றது.
அது இன்பாவே தான் விவேகாவும் எதிர்பார்த்தது தான் இன்று ஒரு முடிவோடு பேசி விட வேண்டும் என்று அவனோடு உள்ளே சென்றாள்.
இன்பா விவேகாவை சுவற்றில் சாய்த்து
இன்பா -விவேகா என்னாச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க என்னை பார்க்கவே மாட்டிங்குற
விவேகா-நான் நல்லா தான் இருக்கேன் சார் first கொஞ்சம் தள்ளி போங்க என்னை விடுங்க நான் போகனும்.
இன்பா-நான் உன்கிட்ட நேற்று என்ன சொன்னேன் நீ கண்ணுக்கு மை வச்சுட்டு வா எனக்கு பார்க்கனும் போல இருக்கு அப்டின்னு ஏன் டி நீ வச்சுட்டு வரல
விவேகா- நீங்கள் சொன்னா நான் ஏன் செய்யனும் , பிலீஸ் leave me
இன்பா- என்னடி சும்மா போகனும் போகனும் ன்னு சொல்ற ஒரு மாதிரி பேசற any thing problem
விவேகா-ஆமா எனக்கு problem தான்
இன்பா-என்ன problem சொல்லு
விவேகா-எனக்கு நீங்கள் தான் problem பிலீஸ் என்னை விடுங்க
விவேகா அவ்வாறு கூறியதும் இன்பாவின் பிடி இறுகியது. என்ன டி சொல்ற என்னால உனக்கு என்ன problem
விவேகா-நீங்கள் என் கிட்ட என்ன சொன்னீங்க
இன்பா-என்ன சொன்னேன் என்று அவள் கைகளை வருடினான்
விவேகா-நானா உங்க கிட்ட வந்து பேசற வரைக்கும் நீங்கள் என்ன disturb பண்ண மாட்டேன் அப்டின்னு சொன்னீங்க
இன்பா- நீ வார்த்தை ல சொன்னால் தான் நீ என்னை விரும்பர அப்டின்னு தெரியுனுமா
விவேகா- அப்படி ஒன்னும் இல்ல அது எப்போதும் நடக்காது எனக்கு உங்களை பிடிக்கல தயவு செய்து என்னை disturb பண்ணாதீங்க உங்களை நான் கெஞ்சி கேட்டு கொள்கிறேன். என்று கூறி விட்டு இன்பாவின் கைகளை தட்டி விட்டு கதவு வரை சென்றாள்.
இப்போது இன்பா அவளை வன்மையாக தன் புறம் இழுத்தான்.
Comments
Post a Comment