Skip to main content

EPI -15 பெண் மீன் விழியில்

சித்தார்த் அவளை உள்ளே  அழைக்க இதன்யா மனதில்  "ஹே அவன் முகத்தை மட்டும் பார்க்காதே, முக்கியமாக அவன் கண்கள் நீ பார்த்தாய், அப்புறம் நீ அவ்ளோ தான்!" என்று அதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே அவனுடைய  அறையை நோக்கி  வந்தாள்.

ஏன் என்றால் சித்தார்த்தின் கண்களின் இமைகள் மிகவும் அடர்த்தியாகவும் மிகவும் நெருக்கமாகவும் அழகாக இருக்கும். அவனுக்கு மிகவும் அழகு சேர்ப்பது அவன் உயிர்ப்பு நிரைந்த கண்கள், இன்னொன்று அந்த குரல் வளை, ஒவ்வொரு முறை அவன் பேசும்போதும் அழகாக மேலும் கீழும் ஏறி இறங்கும் இப்போதே சித் பற்றிய கனவில் தான் சுற்றி கொண்டு வந்தாள் இதன்யா! 

இங்கே சித்தார்த் கணினி திரையில் பார்த்து கொண்டு இருந்தான்.  அவள் என்ன செய்கிறாள் என  பார்க்க அறையின் அருகில்  வந்தவள்  இன்னும் உள்ளே வராமல் இருக்க...

சித் கடுப்பானவன்  இன்னொரு முறை போனில்  அழைக்க.. பார்க்காதே!  நிமிர்த்து மட்டும் பார்த்து விடாதே!  முருகா!  முருகா பிளீஸ்!  என்று சொல்லி கொண்டே உள்ளே அனுமதி கேட்டு வந்தவள்.

உள்ளே வந்தவளின் தலை குனிந்த படியே இருக்க அப்படியே அவனுக்கு  "குட் மார்னிங் சார்!" என வணக்கம் வைத்தாள்.   

அவன் மனதில் " ம்மம் நேற்று ஒரு மாதிரி தெரிகிறாள். இன்று ஒரு மாதிரி தெரிகிறாள் வசியகாரி... ஆனாலும் சும்மா சொல்ல கூடாது டா சித் நல்லா இருக்கா டா அந்த மூக்கு ம்ம் ஒன்னும் சொல்ல முடியல என்னா மூக்கு!" ....

இதன்யா நேராக அவன் சாப்பிடுவதற்கு எல்லாம் அனைத்தும் எடுத்து வைத்து சாப்பிட வாங்க சார்....

பதில் இல்லை...

முருகா முருகா என்னையா நீ பிளீஸ் செல்லம் என்ன சோதிக்காதிங்க ..

அவளது மனது ஒரே ஒரு முறை அவனை பார்த்து சொல்லி விடு டி
அவளது மூளை வேண்டாம் இதன்யா ... என இருவரும் பட்டி மன்றம் நடத்த
இப்போது கொஞ்சம் சத்தமாக சார் பிளீஸ் சாப்பிட வாங்க ...

சித் மனம்  போதும் டா இல்லனா அழுது விடுவாள்.. போ சாப்பிடு அப்புறம் எப்படியும் இங்கே தானே இருப்பா ...
சித்தார்த் அவள் பரிமாறிய மேஜைக்கு வந்து மெதுவாக உணவுகளை நேர்த்தியாக எடுத்து உண்டவன்.
அவளை பார்க்க அவள் பார்வை தரையை பார்த்து கொண்டே இருக்க

"என்ன இன்னிக்கு கொஞ்சம் டிப்பரண்ட் ஆ பிஹேவ் பன்றாளே!
நம்ப முகத்தை வந்ததில் இருந்து ஒரு முறை கூட பார்க்கவே இல்லை!"

"ரசம்"... என இவன் கேட்க

இவள் கொண்டு வந்து ஊற்ற போக அவன் கைகளை வேண்டும் என்றே வைக்க இதன்யா சித்தார்த் தெரிந்தே வைத்த கைகளில் தெரியாமல் ஊற்றி விட்டாள்.

இதற்காகவே காத்திருந்தவன் போல் முதல் முறையாக அவன் உரிமையை நிலை நாட்டுகிறான்.

சித்தார்த், ஹே சுடுது டி... ஸ்..ஹா .. கொதிக்குது டி...

என்ன டி!யா!! என்று நினைத்தவள்.
சாரி சார் பிளீஸ் என்னை மன்னித்து விடுங்கள் என்று அருகில் ஒரு கிளாஸ்ல கூல் வாட்டர் ஊற்றி அதில் அவன் கையை எடுத்து இவளே உள்ளுக்குள் தண்ணிரில் விட
இப்போது பட படக்கும் விழிகளில் இப்போ ஓகே வா... என்று அப்போதும் சித்தார்த்தின் விழிகளை பார்க்க வில்லை.

இதற்கும் மேல் பொறுமையை இழந்த சித்தார்த் அருகில் இருந்த தண்ணிரை எடுத்து ஒரே மூச்சில் குடித்தவன் எழுந்து இதன்யா அவன் கையை பிடித்து இருந்த அதே கையை இப்போது அழுத்தம் கொண்டு அவன் பிடிக்க இப்போது அவளுக்கு எதோ தவறாக பட அப்போதும் அவள் அவன் முகத்தை பார்க்காமல் அவள் கைகளை உருவி கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்க...

சித்தார்த் மனதில் இவளை....
என்று அவளை அப்படியே சுவற்றுக்கு மெதுவாக தள்ளியவன்.
இதன்யா என்று (அழகாக  எப்படி சொல்வது திருத்தமாக ஆனால் அந்த உச்சரிப்பு இவளுக்கு புதிது)
ஹே என்ன பாரு...
தன் பெயரை கூப்பிட்டதும் உள்ளங்கை  வியர்த்தது.

ஹே சீ மீ ... உடல் எல்லாம் சிலிர்த்து போனது பெண்ணவளுக்கு ,
இப்போது இன்னும் அவள் அருகில் நெருங்கியவன் அவளின் தாடையை பற்றி அவனை பார்க்க வைக்க அவளது கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது
 

என்ன மேடம் ரொம்ப ஓவரா பண்றீங்க. ... நான்! நானா! .. 

அப்டி அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே!.... பிளீஸ் என்னை விடுங்க. 

அப்போ எதுக்கு நீ என்னை பார்த்து பேச மாட்டிங்கிர ம்மம்..

டெல் மீ. .  அன்சர் பண்ணு...

 

என்ன என்ன பேச இருக்கு....

அவன் , ம்ம் ஹே இங்கே என்னை பாரு என் கண்ணை பாரு... என்று அவனது மூக்கும் இவளது மூக்கும் உரச சரியாக ஒரே ஒரு இன்ச் இடைவெளி தான்... என்ன எதுவும் என் கிட்ட இருந்து மறைக்கிறாயா...

இல்லையே!  அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல...

அப்போ கண்ணை பார்த்து பேசு ....

ம்ம் சரி நான் உங்க கண்ணை பார்த்து பேசறேன் இப்போ விடுங்க...

ஆர் யூ ஃபால் இன்.... என நிறுத்தி சித் அவளை பார்க்க

வாட் தீ ஹெல்... என இவள் சொல்ல வந்தது கோபம் இவனுக்கு...
இப்போ என்ன சொன்ன ... நான் நான் ஒன்னும் சொல்லல ...

ஹே சொல்லு .... என்ற சித்தார்த்
இப்போ நீ சொன்னதுக்கே உன்னை என்று அவன் விரல்கள் கொண்டு அவள் இதழ்களை வருடியவன்... ம்ம் எனக்கு தான் உன்னை பார்க்க பார்க்க நரகமா இருக்கு என மனதில் நினைத்துக் கொண்டு அவள் உதடுகளை சுண்டி விட்டு விடுவித்தான். அவள் இதயம் வெடித்து மட்டும் தான் சிதரவில்லை.

கதவு வரை சென்றவள் நாளைக்கு நான் காலேஜ் போறேன் ஸார் அதனால் உங்களுக்கு சர்வ் பண்ண என்று அவள் முடிக்க வில்லை...

"வாட் அ கோ இன்சிடென்ட்ஸ்
நான் நாளைக்கு காலேஜ் தான் போறேன் வந்திடு"....

வேக வேகமாக வெளியே வந்தவள் நேராக ரெஸ்ட் ரூம் சென்று கொஞ்ச நேரம் வெளியே வரவே இல்லை...

இதன்யா உன்னை டி போட்டு கூப்பிட்டு விட்டானே!..
நீ எதுக்கு டி சும்மா விட்ட. ..
என்னை என்ன பண்ண சொல்ற அவன் கண்ணை பார்த்து என்னால பேச முடியல வார்த்தை வர மாட்டிங்கிது.
கஷ்டம் ,கஷ்டம் ,கஷ்டம், ரொம்ப கஷ்டம்...
இப்போ அங்கே வந்து என்ன செய்ய போறானோ!பேசாமல் காலேஜ் க்கு லீவ் போட்டு விடு அது தான் உனக்கு நல்லது.ம்ம் சரி அப்போ நான் லீவ் போட்டு கொள்கிறேன்.

அடுத்த நாள் இவள் வருவாள் என்று காலேஜ் சென்ற சித்தார்த்துக்கு வெறும் ஏமாற்றம் தான் .ஹே எதுக்கு டி இப்போ காலேஜ் லீவ் அதுவும் என் கிட்ட சொல்லாமல் லீவ் போட்ட ..  உன்னை நான் எப்போ நினைத்தாலும் வந்து பார்த்து விட வேண்டும். ம்ம் என்ன செய்யலாம். ம்ம் இப்போ நீயா என் கிட்ட நல்லா மாட்டிகிட்ட என்று நினைத்தவன் சதீஷ் குமார்க்கு போன் செய்தான்.
சதீஷ் குமார் தான் சித்தார்த்தின் பெர்சனல் அசிஸ்டென்ட் இப்போது அவன்  புனேவில் இருக்கிறான்.

சதீஷ் நீ இப்போ நான் சொல்லும் வேலையை செய்து விடு என்று அவன் சொல்ல ம்மம் சரி பாஸ் என்று அவன் வேலையை ஆரம்பித்தான்.
(அப்படி என்ன தான் செய்தான் சித்தார்த் அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லைங்க ) இதன்யா இருக்கும் ஹாஸ்டல் தன் அம்மா பவானி பெயரில் வாங்கி விட்டான்.

அடுத்த நாள் இன்று சித்தார்த் பெங்களூரு செல்ல வேண்டும் . அந்த புகைப்படம் பற்றி தன் தாயிடம் விளக்கம் சொல்ல வர சொன்னார். சித்தார்த் போனில் மாம் நான் நாளைக்கு வரேன் என்று சொல்லி வைத்து விட்டான்.

இன்று அவள் எங்கு செல்வாள்?  காலேஜ் அப்படி இல்லனா ஸ்கூல் எங்கே போனாலும் நீ என்னை தான் முதலில் பார்ப்ப டி!  என்று கொஞ்சம் தாமதமாக வீட்டில் இருந்து கிளம்பினான் .

இதன்யா இன்று ஸ்கூல் சென்றாள். அவள் ஹாஸ்டலில் இருந்து கிளம்பும் போதே அவனுக்கு அவள் எங்கு செல்கிறாள் என்று செய்தி வர இங்கு இவன் அழகாக தன்னை தயார் படுத்தி கொண்டு கிளம்பினான்.

சரியாக அவள் வரும் நேரத்திற்கு முன் சித் ஸ்கூலில் சதீஷுடன் இருந்தான். கால்மேல் கால் போட்டு கொண்டு மிரட்டும் தோரணையில் அமர்ந்து இருந்தான்.

இவள் பூஜாவுடன் உள்ளே வர அதற்கும் முன்பே சித் மீட்டிங் ஹாலில் அனைவருக்கும் மீட்டிங் என ஒவ்வொருவராக வர பூஜாவின் பின்னே இவளும் போக சதீஷை சித் பார்க்க  சதீஷ், மிஸ் பூஜா ....
ஸார்... நேற்று ஸ்கூல் க்கு வராதவர்கள் சார வந்து மீட் பண்ணிட்டு போங்க...

பூஜா நேராக சித்தார்த்தை பார்த்து  அவள் காரணத்தை கூற ,
ம்ம் சரி என்று அந்த மீட்டிங் ஹால் அதிரும் படி ஒரு பதில் கூறினான்.

அடுத்தபடியாக  ரெகுலர் ஸ்டாப் ஆங்கில ஆசிரியர் நேற்று வராததால் சித் அருகில் சென்று அவள் பேச வாட் தி எற்த் ஸ் கோஇங் ஆன்.....

அந்த ஹாலில் இருக்கும் அனைவர் பார்வையும் அந்த ஆசிரியர் மீது செல்ல சித்தார்த் அந்த பெண்ணை பார்த்து
இவளோ அன்பிளேசன்ட் ஸ்மெல்... நீங்க ஸ்கூல்க்கு பாடம் எடுக்க வந்து இருக்கீங்களா!  இல்ல எதோ பங்ஷன்,பார்டிக்கு வந்து இருக்கீங்களா!  ....

 

(அந்த பெண் வாசனை திரவியம் ஒப்பனை என மேலும் தன்னை அழகு படுத்திக் கொண்டு வந்தாள்) போங்க!. இப்போ நீங்க ஹன்டல் பண்ற கிளாஸ் க்கு லஸ்சன் பிளான் எழுதி வாங்க என சொல்ல அவள் திருதிருவென முழித்தாள்.

இப்போது சித்தார்த் எல்லாரையும் பார்த்து லீசன் மீ எல்லோரும் அவங்க ஹன்டல் பண்ற கிளாஸ்க்கு எழுதி கொடுத்து விட்டு கிளாஸ்க்கு போங்க என்று தன் கண்களை சுழல விட்டு நெக்ஸ்ட் மீட்டிங் ல பாதி பேர் இருக்க மாட்டிங்க..... மம் சோ சாட் ...

இதன்யா மட்டும் அதே இடத்தில் நின்று கொண்டு இருக்க இப்போது

சித்தார்த்தின் பார்வை அவளை நோக்க... 

தொடரும்....

உங்க comment pannunga I'm waiting!. 

 

Comments

Popular posts from this blog

ஹே சண்டைக்கோழி -1

  விவேகா அவளுடைய நீண்ட கூந்தலை காற்றில் பறக்க விட்டு சல்வார் சுடிதார் அணிந்து கொண்டு அதற்கேற்ற அளவான அழகாக தயாராகி பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டிருக்க ஆதி அவளை ஆஃபீஸ் பஸ்சில் எற கதவு திறக்கிறான் அந்த பஸ்சில்  software solutions என நினைத்து கொண்டு ஏறினாள் ஆனால் அது போலீஸ் ஜீப்ஆக மாறி காவல் நிலையம் கமிஷனர் ஆஃபீஸ் போய் நிற்கிறது. ஆதி..........ஆதி.....ஆதி..... என கத்திகொண்டே எழுந்தாள்.  அது கனவு தான்  என்று அப்போது தான் தன்னிலைக்கு வந்தாள் வானம் செவ்வானம் ஆக மெதுவாக சூரியன் தன் தேர் குதிரைகளை வலம் வர தயராக்கினான் அதி காலை 5.30 மணி இருக்கும் இங்கு விவேகா எழுந்து உட்கார்ந்து கண்களை தேய்க்க அப்போது தான் தெரிந்தது அது கனவு என்று வந்தாள் விவேகா-எதுக்கு வருண் இந்நேரத்தில் அலாரம் வச்சு என்ன இங்க ஓட விட்டு சாவடிக்கிற (வருண் விவேகாவின் அண்ணன்) வருண்- எனக்கு கம்பெனி க்கு ஆள் இல்ல மா அது தான் விவேகா- நீ அதிதி க்கு போன் பண்ணி ரெண்டு பேரும் ஓடி practise பண்ணுங்க இல்லனா அப்டியே ஓடிடுங்க வருண்-விவேகா அடி வாங்க போற விவேகா-பின்ன என்ன டா நீ IPS  ஆக நான்...

EPI -17 ஹே சண்டைக்கோழி

இன்பா-என்னோட நிம்மதியே உன்னால தான் டி போச்சு  என்று மனதில் நினைத்து கொண்டவன் முதலில் தன் அம்மாவிற்கு போன் செய்தான். வசுமதி- சொல்லு ராகவ் இன்பா-அம்மா இங்க காலேஜ் ல management ல பெரிய fault மா  வசுமதி-என்னாச்சு ராகவ் இன்பா-நடந்த விஷயம் கூற தேவையான தகவல் மட்டும் கூறினான் வசுமதி-இதை கேட்டு மிகவும்  கோபபட்டார் ராகவ் விடு டா எங்க அண்ணா கிட்ட பேசி நாளைக்கே இதுக்கு solution கொண்டுவறேன் இன்பா-சரி மா என்று வைத்து விட்டான். மித்ரன்-சரி வாடா சாப்பிடலாம்  இன்பா-நான் வரல டா என்று மிகவும் வலி நிறைந்த குரலில் கூற  மித்ரன்-விடு மச்சி உன்னோட டார்ஜிலிங் உனக்கு நிச்சயமாக கிடைப்பாள் நான் என்னால் முடிஞ்ச help பண்றேன் டா என்று கூற இன்பா அணைத்து கொண்டான் இப்போது மித்ரன்-அப்போ எக்ஸாம் monday வச்சுக்கலாம் டா நாம்ப போய் சொல்லிட்டு வரலாம் டா இன்பா-மித்ரன் எல்லா கிளாஸ் கும் போய் சொல்லு last ஆ விவேகா கிளாஸ் க்கு  போய் சொல்லிக்கலாம். இனிமே தான் இன்பாவோட game start ஆகுது என்று கூறியவன் அவளுடைய வகுப்புக்கு அந்த நாள் செல்லவே இல்லை எங்கே மீண்டும் சென்றால்  விவேகா...

18) பெண் மீன் விழியில்

தாரா சித்தார்த்தை பார்க்க வந்து இருந்தாள்.  தாரா இதன்யாவை பற்றி கேட்க, உடனே ஷி இஸ் நாட் ஜில்லு... ஷி யிஸ் லிட்டில் ஹார்ட் அண்ட் வெறி ஹாட்... என சித்தார்த் சொல்ல தாரா, ஹே சித்து இது நிஜமாவே நீ தானா என்னை ஒரு கிள்ளு கில்லுடா... சித்தார்த் அவளை முறைக்க ஹே சத்தியமா  சான்சே இல்ல ஐ கான்ட் பிலீவ் இட்... இப்போ உனக்கு என்ன பிராப்ளம் என்று அந்த இயற்பியல் புத்தகத்தை புரட்டி கொண்டே சித்து கேட்க, நீ ஒரு வார்த்தை கூட பேச காசு கொடுக்கணும் அப்டின்னு குரு சொல்லுவான்.  அதுவும் இல்லாமல் உனக்கு லீனாவ தவிர யாரையும்.... என தாரா சொல்ல அங்கு அவன் குடித்த லெமன் டீ கப் எடுத்து வீச அது துண்டு துண்டாக நொறுங்கி விழுந்தது. தாரா,பிளீஸ் பிளீஸ் தெரியாம சொல்லிட்டேன் டா .. சித்தார்த் அவன் கைகளை முறுக்கினான். இல்ல டா அந்த லிட்டில் ஹார்ட் யாரு என தாரா சொல்ல அந்த பெயரை கேட்டதும் அவன் உதடுகள் கொஞ்சம் வளைந்தது. உன் கிட்ட சொல்ல முடியாது இப்போ கிளம்பு... ஹே சொல்லு சொல்லு பிளீஸ் டா என அவள் கெஞ்ச..  அவ கெமிஸ்ட்ரி ஸ்டூடண்ட் அவ படிச்சுட்டு இருக்கா... என இழுத்தான்.  ம்ம் பாருடா இன்டரெஸ்டிங் நீ பி...