Skip to main content

EPI -16 பெண் மீன் விழியில்

சித்தார்த் அனைவரையும் லஸ்ஸன் பிளான் எழுத சொல்ல இங்கே இதன்யா உள்ளே சென்றவள் பூஜாவுடன் நின்று கொண்டு இருந்தாள்.

பூஜா நேற்று விடுப்பு எடுத்தகாரணத்தை சொல்லி விட்டு போய் அவளும் லஸ்ஸன் பிளான் எழுத ஆரம்பிக்க இதன்யா மட்டும் அதே இடத்தில் நின்று கொண்டு இருந்தாள்.
சித்தார்த் அவளை பார்த்து ஒய் ஆர் யூ ஸ்டேன்டிங்? என அழுத்தமான வார்த்தைகளில் கேட்க
இவள் அருகில் வந்து நேற்று நான் ஸ்கூல் வரல சார்...
ஏன் வரல... என்று அவளை பார்க்க, அவள் எந்த பதிலும் சொல்லாமல் அப்படியே நிற்க

அங்கே இருந்த அனைத்து ஆசிரியர்களும் இப்போது சித்தார்த்தை பார்க்க அவர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்க்க உடனே அனைவரும் உடனே தலையை குனிந்து கொண்டனர். இப்போ போய் லசன் பிளான் எழுதி கொண்டு வா... இதுக்கு ரீசன்  சொல்லிட்டு தான் நீ கிளாஸ் போகனும்.
இப்போது அங்கு இருந்த ஆசிரியர்கள்  இவன் ஒரு நடிகன் இல்ல அந்த எம லோகத்தில் இருந்து ஸ்ட்ரைக்டா வந்து இருக்கான் ...
போச்சு இந்த பொன்னு நல்லா மாட்டிக்கிச்சு... பாவம் இந்த இதன்யா பொன்னு.. இதுக்கு கிருஷ்ணன் சார் எவ்ளோவோ பரவாயில்லை... என்று அவர்களுக்குள் பேசி கொண்டே எழுதி விட்டு அவனிடம் கொடுத்து விட்டு அவர்கள் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டனர்.
இதன்யா எழுதி கொண்டு இருக்க சதீஷ் அங்கே ஓரமாக நின்று கொண்டு இருக்க,
சித்தார்த் கைகளில் ஒரு பெண்ணை சுழற்றி கொண்டே அவர்களை ஒரு பார்வை பார்க்க ம்ம் ஓகே இப்போ அடுத்த மீட்டிங் ல மீட் பண்ணலாம் அதுக்குள்ள
மிதமாக கற்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து இருக்க வேண்டும்.  அவர்களுக்கு சிறப்பு கவனம் கொடுத்து நன்றாக படிக்கும் குழந்தைகளாக மாற்ற வேண்டும். மிரட்டுவது, அடிப்பது, இந்த மாதிரி எதுவும் என் காதுக்கு வந்தது அவ்ளோ தான்.
ம்ம் ஓகே சார்...
குறைந்து இருக்குமா இருக்காதா...
இப்போது சத்தமாக கண்டிப்பாக முடியும் சார் என்று அனைவரும் கொஞ்சம் சத்தமாக சொல்ல ,
நான் ஒன் வீக் வர மாட்டேன் சோ,
இது தான் உங்க எல்லாருக்கும் நான் வைக்கும் முக்கியமான evaluation காட் இட்...
இந்த வார்த்தையை கேட்ட அனைவருக்கும் அதாவது சித்தார்த் ஒரு வாரம் வர மட்டான் என்ற செய்தி அனைவர் தலையிலும் பனி கட்டிகளை வைத்தது போல் ஒரே குளிர்ச்சி..

இதன்யாவுக்கு சொல்லவே தேவையில்லை முகம் எல்லாம் புன்னகை இல்லை  ஆனால் அவள் கண்கள் பிரகாசமாக மின்னுவதை சித்தார்த் பார்த்து விட்டான்.  நான் வர மாட்டேன் அப்டின்னு சொன்னதும் என்ன சந்தோஷம் டி உனக்கு இதுக்காகவே உன்னை சிறப்பா கவனித்து விட்டு செல்கிறேன் டி...
பிரைன், என்ன பண்ணலாம் சொல்லு சித் அவளை சும்மா விட கூடாது.
அவன் உதடுகள் ம்ம் யோசி ...
இந்த ஒரு வாரமும் நம்ப நினைப்பில் தான் சுத்தனும்.
ம்ம் சிறப்பா செய்வோம்..
ஹே வேணாம் சித் லிட்டில் ஹார்ட் பாவம்.. என மனம் சொல்ல.. அதை அவன் அறிவு கேட்க வில்லை.

நம் உணர்வுகளை வெளிபடுத்த முக்கியம் பங்கு கண்கள் தானே... இவள் மனதில்
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் முருகா ஓம்! முருகா!ஓம் முருகா! சஸ்டியை நோக்க என முதல் வரி மனதில் துதி பாடியவள்... செல்லம் இப்போ லஸ்சன் பிளான் முடிச்சு விட்டு என்னோட பக்திய உனக்கு காட்டுகிறேன் என்று இவள் சந்தோச மன நிலையில் எழுதி கொண்டு இருந்தாள்.

"டிஸ்மிஸ்"... என்று ஒரு அழுத்தமான சத்தம்
விட்டால் போதும் என்று எல்லோரும் ஓடி விட்டனர்.
இப்போது இதன்யா மட்டும் வேக வேகமாக எழுதி கொண்டு இருந்தாள்.
பிசிக்ஸ் யாரு ஹேண்டில் பண்றவங்க லிஸ்ட் போய் கலெக்ட் பண்ணி விட்டு அவங்களை ஆபீஸ் ரூம் ல வெயிட் பண்ண சொல்லு சதிஸ்...
ம்ம் ஓகே பாஸ்... என சிரித்து கொண்டே அவன் கிளம்பி விட்டான்.
டிஸ்மிஸ் அப்டின்னு சித் சொல்லும்போதே வேக வேகமாக எழுதியவள் லாஸ்ட் "எவேல்யுவேஷன்"எழுதி கொண்டு இருக்க சித்தார்த் மாட்டிக்கிட்ட டி "லிட்டில் ஹார்ட்" என்று மனதில் சொல்லியவன் இப்போது அவன் இடத்தில் இருந்து எழுந்தான்.
ஒவ்வொரு அடிகளாக சித்தார்த் இதன்யா அமர்ந்து இருக்கும் இடத்தை நோக்கி நடந்து வர இங்கு அவள் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
முருகா முருகா முருகா... போச்சு போச்சு வந்து விட்டான்.
அய்யோ இன்னிக்கு என்ன பண்ண போரானோ..
ஏற்கனவே என்னோட தூக்கம், நிம்மதி, பசி எல்லாம் போச்சு என்று இவள் நினைத்துக் கொண்டு இருக்க
நான்கு அடிகள்...
இரண்டு அடிகள்...
இப்போது அருகில் அய்யோ போச்சு போச்சு என இவள் எழுதுவதில் கவனம் செலுத்துவது போல் நடிக்க.. அவன் காந்த குரலில் "இதன்யா"என்று கூப்பிட இப்போது அவளை அறியாமல் நிமிர்ந்து பார்த்து விட்டாள்.
அவன் இவளை பார்த்து பிறை போல் ஒரு குட்டி புன்னகை கொஞ்சம் மட்டும் தான்..
ஆர் யூ ஃபினிஷ்டு...
யெஸ் சார்...  இதோ என இப்போது எழுந்து அந்த பேப்பர் அவனிடம் நீட்ட
ம்ம் குட்... என்று அதை வாங்கி கொண்டு அதை பார்க்க
இவள் சார் எனக்கு கிளாஸ்க்கு டைம் ஆச்சு போகட்டுமா...
ம்ம் ஓகே என சித் சொல்ல ,
ஒரு பெருமூச்சு விட்டவள் தேங்க் யூ சார் என ஒரு மூன்று அடிகள் அவள் நடந்து செல்ல..
ஒன் மினிட்...இப்போது அதே இடத்தில் நின்றாள்.
இவன் இவனை என்ன பன்றது சரியா டார்ச்சர் பன்றானே...
சார் சொல்லுங்க என அவள் திரும்ப அவன் இவளை நோக்கி ஒவ்வொரு அடிகளாக வந்தவன்.
நேற்று எங்கே போன..
நான் ..
காலேஜ் ஏன் வரல...
அது அது கொஞ்சம் எனக்கு தலைவலி என்று தன் கண்ணாடியை சரி செய்ய
ஐ ஹேட் லைஸ்....
சார் நிஜம் தான் என்று அவள் கண்கள் அங்கும் இங்கும் அலைபாய,
ஹே என்ன பாரு... உங்க உங்களை தான் ப..பார்க்கிறேன்..
இப்போது இன்னும் இரண்டு அடிகள் இதன்யாவை நோக்கி வர
இப்போது வேக வேகமாக துடிக்கும் இதயத்தை நொந்து கொண்டு அவள் பின்னால் வைத்தாள்.
இவள் பின்னோக்கி நகர அவன் முன்னோக்கி நகர்ந்தான்.
அதை அப்புறம் கவனிக்கிறேன் இப்போ நான் ஒன் வீக் வர மாட்டேன் அப்டின்னு சொன்னதும் உன் முகத்தில் அவ்ளோ சந்தோஷம் அது ஏன்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா..
ம்ம் சொல்லு...
அய்யோ கண்டுபிடித்து விட்டானே என்று நினைத்தவள்.
இல்ல சார் எனக்கு என்ன சந்தோஷம் அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.
ஹே பொய் சொல்லாத...
இல்ல சார் என்று இவள் சொல்ல இப்போது நகர்ந்து கொண்டே வந்தவள் அதற்கு மேல் நகர வில்லை ஏன்...
அதுக்கு அப்புறம் சுவர், அதாவது சுவற்றில் மோதி நின்றாள். சுதாரித்து கொண்டவளாய் கதவு இருக்கும் பக்கம் ஒரு அடி வைக்க உடனே சித் அவள் கால் வைத்த  இடத்தில் அவளை தடுப்பது போல் அவனுடய ஷி கால் வைக்க இப்போது அவள் முகம் அவன் அகன்ற மார்புக்கு நேராக இருக்க உடனே இதன்யாவின் கைகள் வியர்க்க தொடங்கியது.
இப்போ இப்போ எதுக்கு நீங்க இவ்ளோ பக்கத்தில் இருக்கீங்க த தள்ளி போங்க...

நீ பதில் சொல்லு ...
இப்போது கோபம் கொண்டவள் ஆமா நான் லீவு போட்டேன் என்னோட விருப்பம் உங்களுக்கு என்ன? என்று அவன் கண்களை பார்த்து நேராக கூறி விட்டு அவன் கை வளைவில் குனிந்து சென்றாள்.

இப்போது இரண்டே எட்டில் அவளை இழுத்து சுவற்றில் தள்ளி அவள் மேல் ஒட்டி கொண்டான்.
அவளுக்கு அவன் ஸ்பரிசம் உடல் எல்லாம் பூகம்பம் வெடிக்க தொடங்கியது. அவள் ரோமங்களில் உள்ள முடிகள் எல்லாம் சிலிர்த்து நிற்க வேக மூச்சு எடுத்தாள்.

என்ன ஒரே நாளில் மேடம்க்கு இவ்ளோ கோபம்... என்று அவள் காதுக்கு அருகில் போய் சொன்னவன்...
அவளின் கண்ணாடியை கழட்டி விட்டு அருகே உள்ள மேஜை மீது வைத்தான்.
இவள் கண்களை இறுக்கி மூடி கொண்டாள்.
ஹே இதன்யா கண்ணை திற...
அவள் இன்னும் இறுக்கி மூடி கொள்ள
திற டி என்று சொல்லி கொண்டே அவள் இதழ்களை வருடினான்.

ஏனோ அவளுக்கு அவன் அருகில் இருக்கும் போது வார்த்தைகளே வர சிரமபட்டது. இப்போது மூக்கோடு மூக்கு உரசியவன். நான் வர மாட்டேன் அப்டின்னு சொன்னதும் அவ்ளோ சந்தோச படுற ம்ம்ம்ம்...
இப்போது தன்னிலை விளக்கம் கொடுக்க கண்களை திறந்தவள் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை என்று அப்படியே சொல்லிக் கொண்டே அவனை விட்டு விலக முற்பட அவள் தவறு செய்த குழந்தை போல் எதோ சொல்ல

சித் காதுக்கு அந்த வார்த்தைகள் விழ வில்லை அவளை மையல் கொள்ள வேண்டும் என்ற ஆசை தோன்ற இப்போது இதழில் மையல் கொண்டான்.

அவள் அப்படி எல்லாம் இல்லை என்ற சொல் வார்த்தையில் இருக்கும் போதே அந்த கண்களிலும் அவள் மூச்சு காற்றிலும் தன்னை தொலைத்தவன். அவள் இதழில் விழ இதன்யாவின் கண்கள் அகலமாக விரிந்தது என்ன செய்கிறான் இவன் என அவனிடம் இருந்து விலக முயற்சி செய்ய அவளால் முடிய வில்லை.

இங்கிலீஷ் , ஸ்பானிஷ், மெக்சிகன் என அனைத்து வகையும் ஒரே முத்தத்தில் காட்டிட அவன் இங்கிலீஷ் தாண்டி ஸ்பானிஷ் போகும்போதே அவன் முத்தத்தில் இவள் விழுந்து விட்டாள்.  ஒரு சில மணி துளியில் பெண்மை விழித்து கொள்ள அவனை தன் மொத்த பலம் கொண்டு தள்ளி விட்டவள்

அவன் கன்னத்தை பார்த்து ஓங்கி ஒரு அரை விட்டாள்.

இப்போது மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை பார்த்து என்ன நினைத்துக் கொண்டு இருக்கீங்க.... நீங்க நினைக்கிற பொன்னு நான் இல்ல... இந்த வேலை என் கிட்ட வேண்டாம். கொன்றுவேன்... என்று கூறியவள் தன் கண்ணாடியை எடுத்து போட்டு கொண்டு அந்த இடத்தில் இருந்து வேகமாக நடையிட்டாள்.

இதற்கு பின் நம் சித்தார்த் என்ன செய்ய வேண்டும் அவளை பழி வாங்க வேண்டும் அவள் கன்னத்தில்  அடித்ததற்கு ஆனால் அவன் அவள் அடித்த இடத்தை தொட்டு பார்த்து சிரித்தான்.

அது குரோத புன்னகை இல்லை ஆனால் ஏன் சிரித்தான்....? அடுத்து என்ன நடக்கும்? 

தொடரும்...
 unga commentkku naan waiting... 

Comments

Popular posts from this blog

ஹே சண்டைக்கோழி -1

  விவேகா அவளுடைய நீண்ட கூந்தலை காற்றில் பறக்க விட்டு சல்வார் சுடிதார் அணிந்து கொண்டு அதற்கேற்ற அளவான அழகாக தயாராகி பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டிருக்க ஆதி அவளை ஆஃபீஸ் பஸ்சில் எற கதவு திறக்கிறான் அந்த பஸ்சில்  software solutions என நினைத்து கொண்டு ஏறினாள் ஆனால் அது போலீஸ் ஜீப்ஆக மாறி காவல் நிலையம் கமிஷனர் ஆஃபீஸ் போய் நிற்கிறது. ஆதி..........ஆதி.....ஆதி..... என கத்திகொண்டே எழுந்தாள்.  அது கனவு தான்  என்று அப்போது தான் தன்னிலைக்கு வந்தாள் வானம் செவ்வானம் ஆக மெதுவாக சூரியன் தன் தேர் குதிரைகளை வலம் வர தயராக்கினான் அதி காலை 5.30 மணி இருக்கும் இங்கு விவேகா எழுந்து உட்கார்ந்து கண்களை தேய்க்க அப்போது தான் தெரிந்தது அது கனவு என்று வந்தாள் விவேகா-எதுக்கு வருண் இந்நேரத்தில் அலாரம் வச்சு என்ன இங்க ஓட விட்டு சாவடிக்கிற (வருண் விவேகாவின் அண்ணன்) வருண்- எனக்கு கம்பெனி க்கு ஆள் இல்ல மா அது தான் விவேகா- நீ அதிதி க்கு போன் பண்ணி ரெண்டு பேரும் ஓடி practise பண்ணுங்க இல்லனா அப்டியே ஓடிடுங்க வருண்-விவேகா அடி வாங்க போற விவேகா-பின்ன என்ன டா நீ IPS  ஆக நான்...

EPI -17 ஹே சண்டைக்கோழி

இன்பா-என்னோட நிம்மதியே உன்னால தான் டி போச்சு  என்று மனதில் நினைத்து கொண்டவன் முதலில் தன் அம்மாவிற்கு போன் செய்தான். வசுமதி- சொல்லு ராகவ் இன்பா-அம்மா இங்க காலேஜ் ல management ல பெரிய fault மா  வசுமதி-என்னாச்சு ராகவ் இன்பா-நடந்த விஷயம் கூற தேவையான தகவல் மட்டும் கூறினான் வசுமதி-இதை கேட்டு மிகவும்  கோபபட்டார் ராகவ் விடு டா எங்க அண்ணா கிட்ட பேசி நாளைக்கே இதுக்கு solution கொண்டுவறேன் இன்பா-சரி மா என்று வைத்து விட்டான். மித்ரன்-சரி வாடா சாப்பிடலாம்  இன்பா-நான் வரல டா என்று மிகவும் வலி நிறைந்த குரலில் கூற  மித்ரன்-விடு மச்சி உன்னோட டார்ஜிலிங் உனக்கு நிச்சயமாக கிடைப்பாள் நான் என்னால் முடிஞ்ச help பண்றேன் டா என்று கூற இன்பா அணைத்து கொண்டான் இப்போது மித்ரன்-அப்போ எக்ஸாம் monday வச்சுக்கலாம் டா நாம்ப போய் சொல்லிட்டு வரலாம் டா இன்பா-மித்ரன் எல்லா கிளாஸ் கும் போய் சொல்லு last ஆ விவேகா கிளாஸ் க்கு  போய் சொல்லிக்கலாம். இனிமே தான் இன்பாவோட game start ஆகுது என்று கூறியவன் அவளுடைய வகுப்புக்கு அந்த நாள் செல்லவே இல்லை எங்கே மீண்டும் சென்றால்  விவேகா...

18) பெண் மீன் விழியில்

தாரா சித்தார்த்தை பார்க்க வந்து இருந்தாள்.  தாரா இதன்யாவை பற்றி கேட்க, உடனே ஷி இஸ் நாட் ஜில்லு... ஷி யிஸ் லிட்டில் ஹார்ட் அண்ட் வெறி ஹாட்... என சித்தார்த் சொல்ல தாரா, ஹே சித்து இது நிஜமாவே நீ தானா என்னை ஒரு கிள்ளு கில்லுடா... சித்தார்த் அவளை முறைக்க ஹே சத்தியமா  சான்சே இல்ல ஐ கான்ட் பிலீவ் இட்... இப்போ உனக்கு என்ன பிராப்ளம் என்று அந்த இயற்பியல் புத்தகத்தை புரட்டி கொண்டே சித்து கேட்க, நீ ஒரு வார்த்தை கூட பேச காசு கொடுக்கணும் அப்டின்னு குரு சொல்லுவான்.  அதுவும் இல்லாமல் உனக்கு லீனாவ தவிர யாரையும்.... என தாரா சொல்ல அங்கு அவன் குடித்த லெமன் டீ கப் எடுத்து வீச அது துண்டு துண்டாக நொறுங்கி விழுந்தது. தாரா,பிளீஸ் பிளீஸ் தெரியாம சொல்லிட்டேன் டா .. சித்தார்த் அவன் கைகளை முறுக்கினான். இல்ல டா அந்த லிட்டில் ஹார்ட் யாரு என தாரா சொல்ல அந்த பெயரை கேட்டதும் அவன் உதடுகள் கொஞ்சம் வளைந்தது. உன் கிட்ட சொல்ல முடியாது இப்போ கிளம்பு... ஹே சொல்லு சொல்லு பிளீஸ் டா என அவள் கெஞ்ச..  அவ கெமிஸ்ட்ரி ஸ்டூடண்ட் அவ படிச்சுட்டு இருக்கா... என இழுத்தான்.  ம்ம் பாருடா இன்டரெஸ்டிங் நீ பி...