17)தெரிஞ்சு தான் கொடுத்தேன். இன்டென்ஷனா தான் உனக்கு!..
அவன் அவளின் கண்களில் இருந்து மீள முடியாமல் இதழில் விழ அவனை தள்ள முடியாமலும் அந்த இதழ் சண்டையை தடுக்க முடியாமலும் பெண்ணவள் சில நிமிடம் தன்னை மறந்து பின் அவனிடம் இருந்து தன் இதழை மீட்டு கொண்டு வேகமாக தள்ளி விட்டவள்.
அவன் கண்ணங்களில் ஒரு அறை விட்டு ஆள் காட்டி விரலை நீட்டி கொன்றுவேன்.... என மிரட்டி சென்று விட்டாள்.
சித்தார்த் அவள் சென்றதும் ஒரு கையில் கன்னத்தை சிரித்து கொண்டே தேய்த்தவன் . ஒரு கை கொண்டு அவன் இதழ்கள் இரண்டையும் தொட்டு பார்த்து வருடினான். "லிட்டில் ஹார்ட் Today வெறி ஹாட்"என கூறி விட்டு சிரித்து கொண்டே தன் கூலர்ஸ் எடுத்து போட்டு கொண்டு அவன் அறைக்கு சென்றான்.
இதன்யா நேராக ரெஸ்ட் ரூம் சென்றவள் அவன் கொடுத்த முத்தத்தை தேய்த்து கழுவினாள். இன்னும் கழுவு டி என்று அறிவு ஆயிரம் முறை சொல்ல அந்த இதயம் இன்னும் வேகமாக துடித்து கொண்டு தான் இருந்தது.
முகத்தையும் ஒரு முறை கழுவிய பிறகு கண்ணாடியில் அவள் முகத்தை பார்க்க அவன் வாசம் நாசியில் இருந்து கொண்டே இருந்தது.
"எவ்ளோ தைரியம் அவனுக்கு எனக்கு முத்தம் கொடுத்து விட்டானே! . இன்னும் இரண்டு கன்னத்திலும் அறைந்து இருக்க வேண்டும். அவனை சும்மா விட கூடாது!" என்று இப்போது இயலாமயுள் கண்களில் கண்ணீர் கோர்த்து கொண்டது.
"என்னோட முதல் முத்த அனுபவம் அது என்னோடவனோடு தான் இருக்க வேண்டும் இப்போ இவன் எதுக்கு இப்படி செய்தான்." இப்போது என்று கைகளில் நெட்டி எடுத்து கொண்டே கோபத்தில் அங்கும் இங்கும் நடக்க ஒரு நிமிடம் கண்கள் மூடினால் கூட தன் இதழில் மெய் மறந்து அவன் கொடுத்த முத்தம் மட்டுமே நினைவுக்கு வந்தது. இதை நினைக்க நினைக்க அவளுக்கு உலைகலன் போல் கொதித்தது. இதை இப்படியே விட கூடாது என்று நினைத்தவள் அவனிடம் கேட்டு விட வேண்டும் என்று கிளம்பினாள்.
சித்தார்த் தன் அறைக்கு சென்றவன் அவனது கார்ட்ஸ் மற்றும் பணியாளர் அனைவரிடமும் இனி இதன்யா அவனை பார்க்க வந்தால் காத்திருக்க வைக்க கூடாது உடனே உள்ளே அனுப்பி விட வேண்டும். அவர்கள் உடனே சரி என்று வேலையை தொடர்ந்தனர்.
சித்தார்த் எதிர் பார்க்க வில்லை இப்போதே தேடி வருவாள் என்று இவன் போன் எடுத்து தன் அம்மாவிடம் பேசலாம் என்று போன் செய்யப் போக வேக வேகமாக நடந்து இதன்யா அவன் அறைக்கு வந்தாள்.
எதேட்ச்சையாக கணினி திரையில் பார்க்க அவள் மூக்கு புடைக்க கோப பார்வையில் இவன் அறை நோக்கி வருவது தெரிய இப்போது "ஐம் நாட் எக்ஸ்பெக்டட் ஃப்ரம் யூ லிட்டில் ஹார்ட் பட் ஐம் வெயிட்டிங் டி கம் குயிக் லீ"... என சொல்லி கொண்டே பார்க்க அவள் உள்ளே வர யாரும் தடுக்க வில்லை "மே ஐ கம் இன் ஆவது ம***வது" அவள் அப்படி ஒரு கோபத்தில் இருந்தாள்.
இவள் உள்ளே வருவது தெரிந்தும் தெரியாதது போல் சித்தார்த் அதே கம்பீரம், மிடுக்குடன் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருக்க.. உள்ளே வந்தவள் அவன் முன்னே நின்றவள் அவன் வேறு எதிலோ கவனம் செலுத்துவது தெரிய அவள் சொடுக்கிட இவன் தன் புருவத்தை நெரித்து கொண்டே அவளை ஒரு பார்வை பார்க்க...
இதன்யா, எதுக்கு இப்படி செஞ்சீங்க...
சித்தார்த் புருவத்தை மேல தூக்கி கொண்டு என்ன செஞ்சேன்..."எப்படி செஞ்சேன்?"...
"என்ன உங்களுக்கு கொஞ்சம் அறிவு எதுவும் இருக்கா!"
எனக்கா என்று ஒரு சிறு புன்னகை சிந்தியவன்... இப்போ உங்களுக்கு என்ன வேனும்....
இதன்யா மனதில் எதுவும் சொல்ட்ரானா பாரு தெரியாமல் செய்து விட்டேன் அப்டின்னு சொன்ன கூட அவனை நாலு கேள்விகேட்கலாம்....இப்போது அவனிடம்
எதுக்கு கிஸ் பண்ணீங்க?
நானா?
"ம்ம் நீங்க தான்! தெரியாமல் கொடுத்து விட்டேன் அப்டின்னு சொல்றத கேட்க நான் ஒன்னும் முட்டால் இல்ல". என்று கோபத்தில் கைகளை நீட்டி அவனை கேட்க
இப்போது சித்தார்த் அவளை நிதானமாக பார்த்து,
"நான் தெரிஞ்சு தான் கொடுத்தேன்" என்று சொல்ல
இப்போது அவள் வார்த்தைகள் அப்படியே வெளியே வர மறுத்தது.
ஒரு சில நிமிடம் இப்படியே செல்ல சித்தார்த் மௌனம் உடைத்தான்.
"நான் தெரிஞ்சு தான்!" என்று அவன் உதடுகளை கடித்து கொண்டு "தெரிஞ்சு தான் கொடுத்தேன். இன்டென்ஷனா தான் கொடுத்தேன்.'
இப்போது இதன்யா ஏன் இப்படி பண்ணிங்க? எப்படி நீங்க இப்படி செய்யலாம்... இனி நான் இங்கே வேலை செய்ய முடியாது...
சித்தார்த்தின் பார்வை மாறியது "அப்படியெல்லாம் உன்னால போக முடியாது உன் வேலைய நீ தான் செய்யணும் புரியுதா" அவளை பார்த்து குறும்பாக" நான் உன்னை அடிச்சதுக்கு தான் நீ திருப்பி அடிச்சிட்டியே"
இதன்யா இப்போது புருவம் நெருக்கி அவனை முறைத்து பார்க்க "ஐ மின் நான் உனக்கு கிஸ் அடிச்சேன் நீ என் கன்னத்தில் அடிச்சுட்ட... இதுக்கு சரியா போச்சு..
நீ ப்ரீத் பண்ணும்போது டெம்பரேச்சர் 37.°f ல பாரன்ஹீட் ல நீ ப்ரீத் பண்ண சோ எனக்கு அந்த ஹீட் ல நான் மைண்ட் பிளான்க் ஆகி கிஸ் பண்ணிட்டேன். தட்ஸ் ஆல்"..
இதை கேட்டு இதன்யாவால் அடுத்த வார்த்தைப் பேச முடியவில்லை.
இதன்யா,ஒரு சில நிமிடம் கழித்து இனி இந்த மாதிரி வேலை எல்லாம் வச்சுக்க வேண்டாம்.
ம்ம் ஓகே மேடம் தெரியும் சொன்னீங்களே! என்னை கொன்றுவீங்க... அது தானே என்று கூறி உள்ளுக்குள் சிரித்தான்.
நான் வேலைய விட்டு போறேன் என அவள் சொல்ல...
அதற்கு சித்தார்த் அப்போ என்னோட கிஸ் உனக்கு எதோ சம்திங் பண்ணி இருக்கு அதனால் தானே நீ வேலைய விட்டு போற...
மண்ணாங்கட்டி சான்சே இல்ல..
அப்போ உன்னோட வேலைய பாரு!
நான் என்னோட வேலைய பார்க்கிறேன். என சித்தார்த் சொல்ல
இப்போது அவள் எந்த பதிலும் சொல்லாமல் வேகமாக கிளம்பி விட்டாள்.
சித்தார்த் இப்போது அவள் சென்றதும் அவளை முத்தமிட்ட நிகழ்வு நினைவுக்கு வந்தது. அந்த இரு அதரங்களும் அவ்வளவு குளுமை தான் அவளுடைய நாசி அது எப்போதும் தன் மூக்கை வைத்து உரசுவது போல் தோன்றியது. சில மணி துளிகள் அவளும் கண்களை மூடி அவனுள் கரைந்து போனதை இவன் கவனிக்கவே செய்தான்.
இன்னும் கொஞ்ச நாள் தான் டி அப்புறம் நீ என் பக்கத்தில் இருப்ப என மனதில் ஒரு திட்டத்துடன் சித்தார்த் நினைத்து கொண்டு இருக்க அவன் அம்மா அழைத்தாள். மா இன்னும் 2மணி நேரத்தில் வீட்டில் இருப்பேன்... என்று சொல்லி சித்தார்த் கிளம்பினான்.
இங்கே முதல் வகுப்பு அவளுக்கு ஃப்ரீ ஆக இருக்க போய் ஸ்டாப் ரூமில் அமர்ந்து கொண்டாள். அவன் சொன்னது தான் மனதில் ஓடி கொண்டு இருந்தது. எப்படி இதில் இருந்து தப்பிப்பது என யோசித்து கொண்டு இருந்தாள்.
சித்தார்த் பெங்களூர் கிளம்பி விட்டான். ஒரு மணி நேரம் பறந்து அறை மணி நேரம் காரில் விரைந்து இப்போது அந்த அரண்மணை போல் இருக்கும் வீட்டின் உள்ளே நான்கு கார் படை சூழ உள்ளே சென்றான்.
எப்பொதும் எதிலும் மிகவும் நாட்டம் இல்லாமல் கடமை,கடுமை முகத்துடன் சுற்றி கொண்டு இருக்கும் மகன் முகம் மற்றும் கண்களில் என்ன என்று சொல்ல முடியாத ஒரு ஏக்கம் இருக்கும் ஆனால் இன்று முகம் மிகவும் உற்சாகத்துடன் வந்ததை பார்த்த பவானி ஒரு நிமிடம் மனதில் நிம்மதியுடன் அமர்ந்து இருந்தாள்.
மா... எதுக்கு வர சொன்னீங்க...
ஏன் சித்து எதுக்கு அப்டின்னு உனக்கு தெரியாதா....
லீனா புது படத்தில் கமிட் ஆகி இருக்கா போல... எப்போ டா உங்க கல்யாணத்தை நான் பார்ப்பது... எப்போ என்னோட வாரிசுகளை அள்ளி முத்தமிடுவது.
மா.. என்று இப்போது அவன் முகம் கடுமையை தத்து எடுத்துக் கொண்டான்...
அப்போ இதுக்கு என்ன அர்த்தம் என மெலினா- சித்தார்த் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படம் எடுத்து அவன் முன் நீட்டினாள்.
மா பிளீஸ் புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க..
லீனா ரொம்ப நல்ல பொண்ணு நடிகை கூட அதனால் தான் சித்து நான் சொன்னேன். சித்தார்த் மனதில் அவ நல்லவ, அவளை பத்தி உனக்கு ஒன்னும் தெரியாது மா... உங்க அப்பாவுக்கு என் மேல் துளி கூட காதல் இல்லை ஆனால் அந்த ரதி தேவியை எப்படி தாங்குகிறார். லீனா நடிகை இப்போ பார் நான் என்று எதோ சொல்ல வர
ஸ்டாப் இட்...... என்று அவன் கத்தினான்.
நீ லீனா வை வீட்டுக்கு கூட்டி வந்து எவ்ளோ நாள் ஆகுது.
ம்ம் போதும் கூடிய சீக்கிரத்தில் கூட்டிகிட்டு வரேன்....
பவானி ஓகே என்று சொல்ல அவன் வேக வேகமாக படிகளில் ஏறி அவனது அறைக்கு சென்று விட்டான்.
அவன் பெங்களூர் வந்தது தாராகோவிந்த் க்கு தெரிய உடனே சித்து வீட்டுக்கு கிளம்பி விட்டாள். சித் இதன்யாவை பற்றிய சிந்தனையில் லயத்து இருந்தான். தாரா பவானி கிட்ட பேசி விட்டு சித்துவுக்கு பிடித்த லெமன் டீ எடுத்து கொண்டு அவன் அறைக்கு சென்றாள்.
ஹலோ மிஸ்டர் உள்ளே வரலாமா....
சித் யார் என்று பார்த்து விட்டு மம்ம் அவ்வளவு தான் பதில் ...
ஹே ஏண்டா இப்படி முகத்தை வச்சி இருக்க...
அவன் அவளிடம் இருந்து லெமன் டீ வாங்கி கொண்டு ஒரு சிப் குடித்து கொண்டே அவளை பார்த்து உன்னோட படம் எப்படி போகுது....
ம்ம் ஓகே இந்த முறை நான் ரொம்ப ஹோப் ல இருக்கேன் பார்க்கலாம்...
ம்ம் குட் ....
எப்போ டா கம் பக் கொடுக்க போற....
சித் அவளை பார்த்து ஒரே ஒரு கசந்த புன்னகை சிந்தினான் .
உனக்கு ஓகே அப்டின்னா சொல்லு நம்ப ரெண்டு பேரும் ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கலாம்.
ம்ம் அதை அப்புறம் பார்க்கலாம். என்ன உன்னோட முகத்தில் இப்போ கொஞ்சம் சிரிப்பு எட்டி பார்க்குது என்ன விஷயம் சொல்லு டா எதுவும் இப்போ ....
நத்திங்....
கொஞ்சம் சதீஸ் சொன்னான் மீதிய நீ சொன்னா நல்லா இருக்கும்...
ஹே தாரா யூ என அவன் ஒரு தலையணை எடுத்து வீச
ஹே ஓவரா பண்ணாத புரியுதா...
ம்ம் ஆமா ....
ஹே சூப்பர் யாரு டா அந்த ஜில்லு...
ஹே ஜில்லு இல்ல லிட்டில் ஹார்ட் தாரா...
இப்போது தாரா......?
தொடரும்.....
கொஞ்சம் கமென்ட் போடுங்க அப்படியே review ல star பிளீஸ்..
Comments
Post a Comment